அரசு பள்ளிக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம் : அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்பட்டன.மேட்டுப்பாளையம், ஓடந்துறை ஊராட்சி ஊமப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2014ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது. புதிய வகுப்பறைகள் கடந்த, 2021ம் ஆண்டு கட்டப்பட்டன. ஆனால், அறிவியல் ஆய்வுக்கூடமும்,
 அரசு பள்ளிக்கு ஆய்வுக்கூட உபகரணங்கள்



மேட்டுப்பாளையம் : அரசு மேல்நிலைப் பள்ளிக்கு, 2.50 லட்சம் ரூபாய் மதிப்பிலான அறிவியல் ஆய்வக உபகரணங்கள் வழங்கப்பட்டன.

மேட்டுப்பாளையம், ஓடந்துறை ஊராட்சி ஊமப்பாளையத்தில் அரசு மேல்நிலைப்பள்ளி உள்ளது. உயர்நிலைப் பள்ளியாக இருந்த இப்பள்ளி, 2014ம் ஆண்டு மேல்நிலைப் பள்ளியாக தரம் உயர்த்தப்பட்டது.

புதிய வகுப்பறைகள் கடந்த, 2021ம் ஆண்டு கட்டப்பட்டன. ஆனால், அறிவியல் ஆய்வுக்கூடமும், உபகரணங்களும் இல்லாமல் அறிவியல் பாடப் பிரிவு மாணவர்கள் சிரமப்பட்டு வந்தனர்.

ஒவ்வொரு முறையும் செய்முறை பொதுத்தேர்வுக்கு ஒரு வாரத்துக்கு முன், பிளஸ்2 மாணவர்கள், மேட்டுப்பாளையம் நகராட்சி பெண்கள் மேல்நிலை பள்ளிக்கு சென்று, ஆய்வு கூடத்தில் செய்முறை பயிற்சி செய்து வந்தனர். இருந்தும் இப்பள்ளி பிளஸ்2 தேர்வில் கடந்த எட்டு ஆண்டுகளில், ஐந்து ஆண்டுகள், 100 சதவீதம் தேர்ச்சி பெற்றுள்ளது. இந்நிலையில் ஓடந்துறை ஊராட்சி தலைவர் தங்கவேல், சாரதா டெர்ரி புராடக்ட்ஸ் கம்பெனி நிர்வாகத்திடம், அரசு பள்ளிக்கு உதவி செய்ய கேட்டு கொண்டார்.

இதையடுத்து, சாரதா ஊரக தொழில் சார்ந்த மேம்பாட்டு பயிற்சி மையத்தின் சார்பில், 2.50 லட்சம் ரூபாய் மதிப்பில், அறிவியல் ஆய்வு கூடத்திற்கு தேவையான உபகரணங்கள் வாங்கப்பட்டன.

ஆய்வக உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி பள்ளி வளாகத்தில் நடந்தது. பள்ளி தலைமை ஆசிரியர் ராஜேந்திரன் வரவேற்றார். சாரதா டெர்ரி புரொடக்ட்ஸ் நிர்வாக இயக்குனர் கண்ணப்பன், அறிவியல் ஆய்வக உபகரணங்களை வழங்கினார்.

நிகழ்ச்சியில் திட்ட மேலாளர் அருண், பள்ளி ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர் உள்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X