விதிமீறல் ஏராளம்: நடவடிக்கை எடுக்க தயக்கம்.. போஸ்டர்களால் நகர் முழுதும் அலங்கோலம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுவற்றில் பிளக்ஸ் ஒட்டுதல் மற்றும் மின்கம்பங்களில் பிளக்ஸ் கட்டி தொங்க விடுவது என விதிமுறை மீறல்கள் அதிகரித்துள்ளது.பொள்ளாச்சி நகரப்பகுதியில், பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்ட விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். சாலை தடுப்புகள், அரசு கட்டடங்கள், பழைய மற்றும் கூடுதல் பஸ் ஸ்டாப்கள்,
 விதிமீறல் ஏராளம்: நடவடிக்கை எடுக்க தயக்கம்.. போஸ்டர்களால் நகர் முழுதும் அலங்கோலம்

பொள்ளாச்சி : பொள்ளாச்சி நகராட்சிக்கு உட்பட்ட பகுதிகளில், சுவற்றில் பிளக்ஸ் ஒட்டுதல் மற்றும் மின்கம்பங்களில் பிளக்ஸ் கட்டி தொங்க விடுவது என விதிமுறை மீறல்கள் அதிகரித்துள்ளது.

பொள்ளாச்சி நகரப்பகுதியில், பிளக்ஸ் மற்றும் போஸ்டர்கள் ஒட்ட விதிமுறைகளை பின்பற்ற அதிகாரிகள் அறிவுறுத்தி வருகின்றனர். சாலை தடுப்புகள், அரசு கட்டடங்கள், பழைய மற்றும் கூடுதல் பஸ் ஸ்டாப்கள், பேரிகார்டு போன்றவற்றில், போஸ்டர்கள் ஒட்டக்கூடாது என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஆனால், நகரில் விதிமுறைகள் முறையாக பின்பற்றப்படுவதில்லை. பஸ்ஸ்டாண்ட், அரசு அலுவலகங்களின் சுற்றுச்சுவர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் அரசியல் கட்சியினர் மற்றும் 'சினிமா' படம், விளம்பர போஸ்டர்களும் ஒட்டப்படுகின்றன.

பொள்ளாச்சி நியூஸ்கீம் ரோடு ரவுண்டானா அருகே ஹிந்தி எதிர்ப்பு பிளக்ஸ், தனியார் சுவற்றில் நீண்ட துாரத்துக்கு ஒட்டப்பட்டுள்ளது. விதிமுறை மீறல்களால், போஸ்டர் கலாசாரம் அதிகரித்து நகரப்பகுதி முழுவதும் அலங்கோலமாக காட்சியளிக்கிறது.

நகரப்பகுதியில் உள்ள மின்கம்பங்களில், விளம்பர பிளக்ஸ்கள் கட்டி தொங்க விடப்பட்டுள்ளன. மின்கம்பங்கள் அனைத்தும் பிளக்ஸ் மாட்டும் இடமாக மாறியுள்ளதால், இது மின்கம்பமா அல்லது பிளக்ஸ் மாட்டுவதற்காக அமைக்கப்பட்ட கம்பமா என்ற கேள்வி எழுந்துள்ளது. ஆபத்தை உணராமல் வைக்கப்படும் விளம்பர பலகையால் அசம்பாவிதங்கள் ஏற்பட வாய்ப்புள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X