6,000 பேர் பணிநீக்கம்: எச்.பி., நிறுவனம் முடிவு

Added : நவ 23, 2022 | |
Advertisement
புதுடில்லி :'மெட்டா, டுவிட்டர், கூகுள், அமேசான்' நிறுவனங்களின் வரிசையில், அடுத்ததாக எச்.பி., நிறுவனமும், ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்குகிறது.லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்.பி., 6,000 பேர் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது, அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 12
HP job cut, hp,6000 employees,layoff,6000 பேர், பணிநீக்கம்,

புதுடில்லி :'மெட்டா, டுவிட்டர், கூகுள், அமேசான்' நிறுவனங்களின் வரிசையில், அடுத்ததாக எச்.பி., நிறுவனமும், ஆள்குறைப்பு நடவடிக்கையில் இறங்குகிறது.

லேப்டாப் உள்ளிட்ட மின்னணு சாதனங்களை தயாரித்து வரும், உலகின் மிகப் பெரிய தொழில்நுட்ப நிறுவனங்களில் ஒன்றான எச்.பி., 6,000 பேர் வரை பணிநீக்கம் செய்ய முடிவு செய்துள்ளது. இது, அதன் மொத்த ஊழியர்களின் எண்ணிக்கையில் கிட்டத்தட்ட 12 சதவீதம் ஆகும்.

இந்நிறுவனம், அதன் நடப்பு முழு ஆண்டுக்கான நிதி அறிக்கையில், 4,000த்திலிருந்து, 6,000 பேரை, 2025 நிதியாண்டுக்குள்ளாக பணிநீக்கம் செய்ய இருப்பதாக தெரிவித்துள்ளது.

கொரோனா காலத்தில், லேப்டாப் மற்றும் பெர்சனல் கம்ப்யூட்டர்கள் விற்பனை அதிகரித்திருந்த நிலையில், தற்போது தொடர்ந்து சரிவைக் கண்டு வருகிறது.

விற்பனை சரிவு மட்டுமின்றி; பணவீக்க உயர்வு மற்றும் பொருளாதார மந்த நிலை ஆகியவையும், நிறுவனத்தின் இந்த செலவைக் குறைக்கும் முடிவுக்கு காரணமாக அமைந்துள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X