சிறப்பு பகுதிகள்

இது உங்கள் இடம்

ராஜிவ் தியாகம் சீமானுக்கு தெரியாது!

Added : நவ 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த கொலைகாரர்களில் நான்கு பேர், இலங்கையை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது; அவர்களை நாடு கடத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். ஆனால், சீமான் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு, இது

என். மல்லிகை மன்னன், மதுரையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: 'முன்னாள் பிரதமர் ராஜிவை படுகொலை செய்த கொலைகாரர்களில் நான்கு பேர், இலங்கையை சேர்ந்தவர்களாக இருப்பதால், அவர்கள் விடுதலை செய்யப்பட்டாலும், இந்தியாவில் தங்கியிருக்க அனுமதிக்கக் கூடாது; அவர்களை நாடு கடத்த வேண்டும்' என, சமூக ஆர்வலர்கள் சொல்கின்றனர். ஆனால், சீமான் போன்ற அரசியல் வியாபாரிகளுக்கு, இது கடும் வயிற்றெரிச்சலை ஏற்படுத்தியுள்ளது.

'ராஜிவ் என்ன பெரிய தியாகியா? சோனியா வெளிநாட்டை சேர்ந்தவர் தானே? அவரையும் நாடு கடத்த வேண்டியது தானே?' என்று உளறிக் கொட்டி இருக்கிறார் சீமான். இதைக் கேட்கும் போது, ராஜிவை கொன்றவர்களை மன்னித்த, சோனியாவுக்கும், அவரின் குடும்பத்தினருக்கும், இதுவும் வேண்டும், இன்னமும் வேண்டும் என்றே சொல்லத் தோன்றுகிறது. சோனியா, வெளிநாட்டைச் சேர்ந்தவர் என்றாலும், முறைப்படி குடியுரிமை பெற்றவர்.

ராஜிவ் என்ன பெரிய தியாகியா என்று கேட்கும் சீமான், விடுதலை புலிகள் தலைவராக இருந்த, மறைந்த பிரபாகரன் செய்த தியாகங்களை பட்டியலிட தயாரா? ராஜிவை மட்டும் விடுதலை புலிகள் கொடூரமாகக் கொலை செய்ய வில்லை. ஈழத்தை சேர்ந்த தமிழர்களின் உரிமைக்காக அறவழியில் போராட்டம் நடத்திய பத்மநாபாவையும், அமிர்தலிங்கத்தையும் கொன்றனர்.

ராஜிவ், பத்மநாபா, அமிர்தலிங்கம் மரணத்திற்கு பரிகாரமாக, பிரபாகரன் குடும்பத்தை கூண்டோடு அழித்து பரிகாரம் தேடிக் கொண்டது, இலங்கை ராணுவம்.

'கத்தி எடுத்தவன், கத்தியால் சாவான்' என்ற பழமொழி, பிரபாகரன் விஷயத்தில் நிரூபணமாகியுள்ளது. நேரு, இந்திரா, ராஜிவ் போன்றோர், இந்த நாட்டுக்காக செய்த தியாகங்கள், சீமான் போன்றவர்களுக்கு தெரிய வாய்ப்பில்லை.

சீமான் போன்ற வெத்து வேட்டுக்கள் என்ன தான் ராஜிவ் கொலையாளிகளை தியாகிகளாக, குற்றமற்றவர்களாக காட்ட முயற்சித்தாலும், தமிழக மக்களின் கண்களுக்கு, அவர்கள் என்றும் கொடூர கொலைக்காரர்களாகவே தெரிவர்; அவர்களை என்றுமே மனதளவில் மன்னிக்கவே மாட்டார்கள் என்பதே நிதர்சனம்.ஆப்ரஹாம் லிங்கன் அறிவுரையை பின்பற்றுங்க!ந.தேவதாஸ், சென்னையில் இருந்து எழுதுகிறார்: நீலகிரி மாவட்டம், கூடலுார் அரசு மேல்நிலைப்பள்ளி மாணவன் யுவராஜ், 2017ல் தற்கொலை செய்து கொண்டான். இதுதொடர்பான வழக்கு விசாரணையில், 'மாணவர்களின் ஒவ்வொரு செயலுக்கும், ஆசிரியர்கள் மற்றும் தலைமை ஆசிரியர்களை குற்றம் சொல்ல முடியாது.

'குழந்தைகளுக்கு இயற்கையான பாதுகாவலர்கள் பெற்றோர் தான். பள்ளியில் மாணவர்களுக்கு ஆசிரியர்கள் பாதுகாப்பு தருகின்றனர். குழந்தைகளை ஒழுங்கு படுத்துவதும், வீட்டிற்குள்ளும், வெளியிலும் அவர்களை கண்காணிக்க வேண்டிய பொறுப்பும், பெற்றோருக்கு தான் உள்ளது.

'பள்ளிக்கு வரும் ஒவ்வொரு மாணவனின் மனநிலையையும், ஆசிரியரால் கண்காணிக்க முடியாது; ஆனால், பெற்றோரால் கண்காணிக்க முடியும். இவ்வழக்கை பொறுத்தவரை, மாணவனின் தற்கொலைக்கு தலைமை ஆசிரியர் பொறுப்பல்ல... அவரை தேவையின்றி இழுத்துள்ளனர்; எனவே, மனு தள்ளுபடி செய்யப்படுகிறது' என்று, நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

இந்த நேரத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் ஆப்ரஹாம் லிங்கனை நினைவு கூற விரும்புகிறேன். தன் மகனின் பள்ளி ஆசிரியருக்கு, அவர் ஒரு கடிதம் எழுதினார்; அந்த கடித விபரம்...

'நாட்டில் உள்ள எல்லாரும் நேர்மையானோரும் அல்ல; உண்மையானோரும் அல்ல. ஒவ்வொரு அயோக்கியனுக்கும் ஒரு தலைவன் உண்டு. ஒவ்வொரு சுயநல அரசியல்வாதிக்கும், ஒரு தலைவன் உண்டு என்று, என் மகனுக்கு கற்றுக் கொடுங்கள்.

'ஒவ்வொரு எதிரிக்கும், ஒரு நண்பன் உண்டு என்று கற்றுக் கொடுங்கள். என் மகன் அவனாகவே சம்பாதித்த ஒரு டாலர், ஐந்து பவுனை விட உயர்ந்தது என்றும், அவனுக்கு தோற்கவும் கற்றுக் கொடுங்கள்.

'வெற்றியின் மகிழ்ச்சியையும் உணர்த்துங்கள். ஏமாற்றுவதை விட தோற்றுப் போவது, எவ்வளவோ உயர்ந்தது என்பதையும் சொல்லிக் கொடுங்கள்.

'அவனுக்கு பலம் கொடுங்கள். தவறான பாதையில் போகும் கூட்டத்தை தொடர்ந்து செல்லாமல் இருக்க கற்றுக் கொடுங்கள். கேட்டது அவ்வளவையும் உண்மை என்று நம்பாமல், துணியில் வடிகட்டி, நல்லதை மட்டும் எடுத்துக் கொள்ள கற்றுக் கொடுங்கள். கண்ணீர் சிந்துவதில் வெட்கப்பட வேண்டியது இல்லை என்பதையும் போதியுங்கள்...' என, எழுதியுள்ளார்.

தன் மகனின் ஆசிரியருக்கு, அன்று அவர் எழுதிய கடிதம், இன்றைய கால கட்டத்தில் ஒவ்வொரு ஆசிரியரும், பெற்றோரும் அவசியம் பின்பற்ற வேண்டிய அறிவுரை. மேலும், ஆசிரியர் - பெற்றோர் இடையே உள்ள நல்லுறவை பேணிக் காக்கும் அருமருந்தாகும். கடிதத்தை பின்பற்றுங்கள் ஆசிரிய பெருமக்களே!




அணுகுமுறையை மாற்றுங்க ஊடகங்களே!சி.ராதாகிருஷ்ணன், சென்னையிலிருந்து அனுப்பிய, 'இ - மெயில்' கடிதம்: முந்தைய அ.தி.மு.க., ஆட்சியின் போது, தமிழகத்தின் எந்தப் பகுதியில் சிறு அசம்பாவிதம் நடந்தாலும், ஆட்சியாளர்கள் தான் காரணம் என்று, சமூக ஆர்வலர்கள், தமிழ் காவலர்கள், சனாதன எதிர்ப்பாளர்கள், புரட்சி போராளிகள் என்ற போர்வையில் செயல்படும் அமைப்புகள் கூப்பாடு போட்டு வந்தன.

பல விதமான போராட்டங்களையும், முன்னெடுத்து வந்தன. போதாக்குறைக்கு நடிகர்கள் சிலரும், அவ்வப்போது அரசுக்கு எதிராக குரல் கொடுத்து வந்தனர்.

அவர்கள் இன்றைய தி.மு.க., ஆட்சியில், தமிழகத்தில் நடைபெறும் அவலங்களை கண்டும் காணாமல் கண்மூடி, வாய்மூடி இருப்பதன் மர்மம் என்ன? தி.மு.க., தவிர வேறு யார் ஆட்சியில் இருந்தாலும், தமிழகத்தை பதற்றத்திலும், பரபரப்பிலும் வைத்திருக்க முற்பட்ட அந்த எடுபிடிகள் இன்று எங்கிருக்கின்றனர் என்றே தெரியவில்லை.

அ.தி.மு.க., ஆட்சியில், தந்தை வெட்டி வைத்த போர்வெல் குழியில், மகன் விழுந்து இறந்த போது, ஏதோ தமிழக அரசு தான் அதற்கு காரணம் என்பதை போல, தீபாவளி கொண்டாட விடாமல், அந்த நாளை துக்கமாக அனுசரித்தன சில மீடியாக்கள்.

இன்று ஏழை குடும்பத்தை சார்ந்த விளையாட்டு வீராங்கனை பிரியாவின் மரணத்திற்கு, தமிழக மருத்துவத் துறை தான் காரணம் என்று தெரிந்த பிறகும், அதே மீடியாக்கள் மவுனம் காக்கின்றன.

சாத்தான்குளத்தை சேர்ந்த தந்தை, மகன் போலீஸ் காவலில் இறந்த வழக்கில், விழுந்து விழுந்து விவாதம் நடத்தியவர்கள், கால்பந்தாட்ட வீராங்கனை பிரியா, முதல்வரின் தொகுதியில் உள்ள அரசு மருத்துவமனையில் பணிபுரியும் டாக்டர்களின் தவறான சிகிச்சையால் மரணமடைந்திருப்பதை விவாதிக்க மறுப்பது ஏன்... இதற்காக இவர்களுக்கு மறைமுகமாக உத்தரவு போடுவதும், உதவி செய்வதும் யார்?

சினிமா துறையை போல, தமிழக காட்சி ஊடகங்களில் பெரும்பாலானவை, தி.மு.க.,வின் கட்டுப்பாட்டில் தான் இருக்கின்றன என்பது, மீண்டும் ஒருமுறை நிரூபிக்கப்பட்டு உள்ளது.

அ.தி.மு.க., - பா.ஜ., என்றால், ஒரு அளவு கோல், தி.மு.க., - கூட்டணி கட்சிகள் என்றால் ஒரு அளவு கோல் என்று செயல்படும், இந்த ஊடகங்கள் தங்களின் அணுகுமுறையை மாற்றி, நேர்மையாக செயல்பட வேண்டும்.




புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
Dharmavaan - Chennai,இந்தியா
24-நவ-202208:35:28 IST Report Abuse
Dharmavaan தீமகாவின் கை கூலிகள் அது போடும் எலும்புத்துண்டுக்கு வெளியே வந்து குரைத்த பிறவிகள் இப்போது வாழை சுருட்டிக்கொண்டு மூலையில் கிடக்கின்றன மனமில்லை.
Rate this:
Cancel
D.Ambujavalli - Bengaluru,இந்தியா
24-நவ-202207:00:22 IST Report Abuse
D.Ambujavalli கள்ளக்குறிச்சி மரணத்தில் கள்ள மவுனம், பிரியா மரணத்தில் அமைச்சரே பூசி மெழுகல், ஆளும் கட்சி ஆனா உடனே மீடியாக்களை சாம , பேதம்,தானம், தண்டம் என்று அடக்கி வைத்தல் எல்லாம் விடியல் சாதனை
Rate this:
Cancel
g.s,rajan - chennai ,இந்தியா
24-நவ-202205:06:37 IST Report Abuse
g.s,rajan "உளறல் திலகம்"- சீமான் ,அவரை விட்டுத் தள்ளுங்க
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X