கோவை ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதால் அபாயம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
எச்சரிக்கை பலகை சேதம்வால்பாறை, புதுதோட்டம் அருகே, வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து, அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை புதர்சூழ்ந்தும், சேதமடைந்தும் உள்ளது. வனத்துறை அதிகாரிகள் கவனித்து, பலகையை புதுப்பிக்க வேண்டும்.- விக்ரம், புதுத்தோட்டம். கேட்பாரற்ற வாகனம்வால்பாறை நகர கூட்டுறவு வங்கி முன், பல ஆண்டுகளாக பழுதடைந்த வாகனம் ஒன்று நிறுத்தி
 கோவை ரோட்டில் வாகனங்கள் நிறுத்துவதால் அபாயம்




எச்சரிக்கை பலகை சேதம்



வால்பாறை, புதுதோட்டம் அருகே, வனவிலங்குகள் நடமாட்டம் குறித்து, அமைக்கப்பட்டுள்ள எச்சரிக்கை பலகை புதர்சூழ்ந்தும், சேதமடைந்தும் உள்ளது. வனத்துறை அதிகாரிகள் கவனித்து, பலகையை புதுப்பிக்க வேண்டும்.

- விக்ரம், புதுத்தோட்டம்.


கேட்பாரற்ற வாகனம்



வால்பாறை நகர கூட்டுறவு வங்கி முன், பல ஆண்டுகளாக பழுதடைந்த வாகனம் ஒன்று நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. கேட்பாரற்று கிடக்கும் இந்த வாகனத்தால் போக்குவரத்துக்கு இடையூறு ஏற்படுகிறது. போக்குவரத்து போலீசார், இந்த வாகனத்தை அப்புறப்படுத்த வேண்டும்.

- தர்மன், வால்பாறை.


பாலம் சேதம்



மாக்கினாம்பட்டி ஊராட்சிக்கு உட்பட்ட, இந்திரா நகரில், கழிவுநீர் செல்ல ஏதுவாக, கட்டபட்டிருந்த கான்கிரீட் பாலம் சேதமடைந்துள்ளது. இதனால், இரவு நேரங்களில் இந்த ரோட்டில் வாகன ஓட்டிகள் விபத்தில் சிக்குகின்றனர். பாலத்தை சீரமைக்க ஊராட்சி முன்வர வேண்டும்.

- - சக்திவேல், மாக்கினாம்பட்டி.


குண்டும்- குழியுமான ரோடு



வால்பாறை நகரில் இருந்து, நல்லகாத்து செல்லும் ரோட்டில், பல இடங்களில் ரோடு குண்டும்- குழியுமாக உருக்குலைந்துள்ளது. இதனால், வாகன ஓட்டிகள் இரவு நேரங்களில் இந்த வழியாக செல்லும் போது விபத்துக்கு உள்ளாகின்றனர். நகராட்சி நிர்வாகம், ரோட்டை சீரமைக்க வேண்டும்.

- -நவீன், வால்பாறை.


தெருநாய்கள் தொல்லை



பொள்ளாச்சி நகராட்சி, 3வது வார்டு ஸ்ரீவாரி கார்டனில் தெருநாய்கள் தொல்லை அதிகரித்துள்ளது. இதனால், மக்கள் அச்சத்தில் உள்ளனர். நகராட்சி அதிகாரிகள் கவனித்து, தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டும்.

- வினுகார்த்தி, பொள்ளாச்சி.


கழிவுகளால் அபாயம்



மாக்கினாம்பட்டியில் இருந்து, பக்கோதிபாளையம் செல்லும் வழியில் இறைச்சிக்கழிவு கொட்டப்படுவது அதிகரித்துள்ளது. இதனால், அந்த பகுதி முழுவதும், துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயமும் ஏற்பட்டுள்ளது. இறைச்சிக்கழிவு கொட்டுவதை தடுக்க வேண்டும்.

- -- சந்திரன், மாக்கினாம்பட்டி.


அத்துமீறும் வாகனங்கள்



பொள்ளாச்சி, வெங்கட்ரமணன் வீதி, மீன்கரை ரோடு மற்றும் மார்க்கெட் பகுதிகளை இணைக்கும் முக்கிய பகுதியாக உள்ளது. இந்த ரோட்டில் விபத்தை தடுக்க, ஒருவழிப்பாதையாக போக்குவரத்து போலீசார் அறிவித்துள்ளனர். இதை மீறி, வாகனங்கள் செல்கின்றன. போலீசார் கவனித்து, நடவடிக்கை எடுக்க வேண்டும்.

-- ஜெகநாதன், பொள்ளாச்சி.


'பார்க்கிங்' பகுதியான ரோடு



கோவை - பொள்ளாச்சி ரோட்டில் உள்ள, வணிக நிறுவனங்கள் மற்றும் ஓட்டல்களுக்கு வாகன நிறுத்துமிட வசதி இல்லை. இதனால், ரோட்டை ஆக்கிரமித்து, வாகனங்கள் நிறுத்துவது, வாடிக்கையாகி வருகிறது. போக்குவரத்து போலீசார், இதை, ஒழுங்குபடுத்த வேண்டும்.

-- நல்லசிவன், பொள்ளாச்சி.


சந்திப்பில் வெளிச்சமில்லை



பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், நல்லுார் கிருஷ்ணாகுளம் ரோடு சந்திப்பில் போதுமான தெருவிளக்கு வசதியில்லை. இதனால், இரவு நேரத்தில் சந்திப்பு பகுதி இருப்பது தெரியாமல், வாகனங்கள் தடுமாறி விபத்துக்குள்ளாகின்றன.

- முத்துக்குமார், நல்லுார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X