மத்திய அரசின் உதவித்தொகை; ஆதாரை இணைக்க 'அட்வைஸ்'

Added : நவ 23, 2022 | |
Advertisement
மேட்டுப்பாளையம், : மத்திய அரசின் உதவி தொகையை பெற விவசாயிகள் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் தாலுகாவில் இன்னும், 3,608 விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.மத்திய அரசு 'பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா' திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாயை, மூன்று தவணைக்களாக உதவித்தொகை வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிகளின் வங்கிமேட்டுப்பாளையம், : மத்திய அரசின் உதவி தொகையை பெற விவசாயிகள் இணையதளத்தில் ஆதார் எண்ணை இணைக்க வேண்டும். மேட்டுப்பாளையம் தாலுகாவில் இன்னும், 3,608 விவசாயிகள் ஆதார் எண்ணை இணைக்கவில்லை.

மத்திய அரசு 'பிரதான் மந்திரி கிசான் சம்மன் யோஜனா' திட்டத்தில், விவசாயிகளுக்கு ஆண்டுக்கு, 6 ஆயிரம் ரூபாயை, மூன்று தவணைக்களாக உதவித்தொகை வழங்கி வருகிறது. ஒவ்வொரு விவசாயிகளின் வங்கி கணக்கிலும், இந்த தொகை வரவு வைக்கப்படும். இந்த முறை உதவித்தொகை பெறும் விவசாயிகள் தங்கள் ஆதார் எண்ணை மத்திய அரசின் இணையதளத்தில் இணைக்க வேண்டும். அப்போதுதான் வங்கி கணக்கில் பணம் வரும்.

இதுகுறித்து மேட்டுப்பாளையம் வேளாண் உதவி இயக்குநர் பாக்கியலட்சுமி வெளியிட்ட அறிக்கை: விவசாயிகளுக்கு மத்திய அரசு உதவித்தொகை வழங்கி வருகிறது. ஆதார் எண்ணை மத்திய அரசின் இணையதளம் வழியாக இணைக்க வேண்டும். ஆதார் எண்ணுடன், மொபைல்போன் எண்ணை ஏற்கனவே இணைத்தவர்கள், இணையதளத்தில் தங்களின் ஆதார் எண் விபரத்தினை, உள்ளீடு செய்தால், 'ஓ.டி.பி' எண் வரும். அதனை உள்ளீடு செய்து, ஆதார் விபரங்களை சரிபார்த்து உறுதிப்படுத்தி கொள்ளலாம். ஆதார் எண்ணை இணைக்காத விவசாயிகள், அருகில் உள்ள பொது இ-சேவை மையங்களுக்கு சென்று, பி.எம்., கிசான் திட்ட இணையதளத்தில் ஆதார் விபரங்களை பதிவு செய்து, தொடர்ந்து உதவித்தொகை கிடைப்பதை உறுதி செய்து கொள்ள வேண்டும்.

இத்திட்டம் குறித்து மேலும் விபரங்களை அறிய, தோலம்பாளையம் பகுதி விவசாயிகள், உதவி விதை அலுவலர் சந்திரசேகர், 72003 85038 என்ற எண்ணுக்கும், பெள்ளாதி, மருதுார் விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர் சிவராஜ், 82203 69627, ஓடந்துறை, நெல்லித்துறை, தேக்கம்பட்டி பகுதி விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர் பாலகிருஷ்ணன், 97510 15227, சிக்கரசம்பாளையம், ஜடையம்பாளையம், சிறுமுகை பகுதி விவசாயிகள் உதவி வேளாண் அலுவலர் சுரேஷ், 85087 54485, இரும்பறை, முடுதுறை, இலுப்பநத்தம் பகுதி விவசாயிகள், உதவி வேளாண் அலுவலர் 94877 02008, காரமடை, சிக்காரம் பாளையம் விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் கருப்புசாமி, 97919 98833, பெள்ளேபாளையம், சின்னக்களிப்பட்டி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் சரவணகுமார் 98488 42328, காளம்பாளையம், கெம்மராம்பாளையம் பகுதி விவசாயிகள் உதவி தோட்டக்கலை அலுவலர் சுகேந்திரன், 73389 89880 என்ற எண்ணில் அலுவலர்களை தொடர்பு கொண்டு விபரங்களை தெரிந்து கொள்ள வேண்டும்.

இவ்வாறு அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X