தொழில் செய்ய மானியத்துடன் கடன் பெற அழைப்பு; வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரி தகவல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
அன்னூர் : 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், தொழில் செய்ய மானியத்துடன் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. அன்னூரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது. இதில் சென்னையைச் சேர்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் டேனியல் செல்லையா பேசுகையில், "விவசாயத்துக்கு, வீடுகளுக்கு, சிறு, குறு தொழில்
 தொழில் செய்ய மானியத்துடன் கடன் பெற அழைப்பு; வாழ்ந்து காட்டுவோம் திட்ட அதிகாரி தகவல்

அன்னூர் : 'வாழ்ந்து காட்டுவோம்' திட்டத்தில், தொழில் செய்ய மானியத்துடன் கடன் பெற அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.

அன்னூரில் வாழ்ந்து காட்டுவோம் திட்டத்தில் தொழில் முனைவோருக்கான மேம்பாட்டு பயிற்சி வகுப்பு நேற்று நடந்தது.

இதில் சென்னையைச் சேர்ந்த திறன் மேம்பாட்டு பயிற்சியாளர் டேனியல் செல்லையா பேசுகையில், "விவசாயத்துக்கு, வீடுகளுக்கு, சிறு, குறு தொழில் நிறுவனங்களுக்கு பயன்படுத்தும் பல உபகரணங்களை எளிதாக தயாரித்து விற்பனை செய்ய முடியும். இதற்கு ஒரே ஒரு ஐ.டி.ஐ., படித்த உதவியாளர் அல்லது அந்த தொழில் தெரிந்த ஒருவர் இருந்தால் போதுமானது, அந்தப் பொருளை உற்பத்தி செய்வது குறித்து பயிற்சி அளிக்கப்படும். எனவே தொழில் முனைவோர் ஆகி உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக் கொள்ளலாம்," என்றார்.

'வாழ்ந்து காட்டுவோம்' திட்ட உதவி இயக்குனர் ஜெகதீசன் பேசியதாவது:

கோவை மாவட்டத்தில், அன்னூர், சர்க்கார் சாமக்குளம், காரமடை, பெரியநாயக்கன் பாளையம் என நான்கு ஒன்றியங்களில் 54 ஊராட்சிகளில் இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது, இதுவரை தொழில் குழுக்கள் அமைக்க தொடக்க நிதியாக 36 குழுக்களுக்கு தலா 75 ஆயிரம் வீதம் 27 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. 32 உற்பத்தியாளர் குழுக்களுக்கு 24 லட்சம் ரூபாய் வழங்கப்பட்டுள்ளது.

புதிதாக அன்னூர் மற்றும் காரமடை ஒன்றியங்களில் தலா நான்கு தொழில் குழுக்களையும், பெரிய நாயக்கன்பாளையம், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியங்களில் தலா மூன்று குழுக்களையும் துவக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதில் 60 சதவீதம் கடனாக வழங்கப்படும். 30 சதவீதம் மானியம் தரப்படும்.

தனிநபர்கள் செய்யும் சிறு தொழில்களுக்கு, 15 லட்ச ரூபாய் முதல் 30 லட்சம் ரூபாய் வரை உதவி செய்யப்படும். ஆர்வம் உள்ளவர் உள்ளவர்கள் 90801 71755 மற்றும் 0422- 2300633 என்னும் தொலைபேசி எண்களை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு, அவர் பேசினார்.

பயிற்சியில் திட்ட செயல் அலுவலர்கள் சமூக வல்லுனர்கள், சுய உதவி குழு பிரதிநிதிகள், பயிற்சியாளர்கள் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X