சீனா 'ஐபோன்' தொழிற்சாலையில் போர்க்கொடி துாக்கும் ஊழியர்கள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
புதுடில்லி:சீனாவில் உள்ள, உலகின் மிகப் பெரிய 'ஐபோன்' தொழிற்சாலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது. எதிர்ப்பு'ஆப்பிள்' நிறுவனத்தின் ஒப்பந்த தயாரிப்பாளரான 'பாக்ஸ்கான்' நிறுவனத்துக்கு, சீனாவில் உள்ள ஜென்ஜோ நகரில் மிகப் பெரிய ஆலை உள்ளது. இந்த ஆலை, 3.50 லட்சம்
iphone, China,apple,சீனா, ஐபோன், தொழிற்சாலை,ஊழியர்கள்,போர்க்கொடி

புதுடில்லி:சீனாவில் உள்ள, உலகின் மிகப் பெரிய 'ஐபோன்' தொழிற்சாலையில், போராட்டத்தில் ஈடுபட்ட ஊழியர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தும் வீடியோ, தற்போது சமூக வலைத்தளங்களில் பகிரப்பட்டு வருகிறது.


எதிர்ப்பு



'ஆப்பிள்' நிறுவனத்தின் ஒப்பந்த தயாரிப்பாளரான 'பாக்ஸ்கான்' நிறுவனத்துக்கு, சீனாவில் உள்ள ஜென்ஜோ நகரில் மிகப் பெரிய ஆலை உள்ளது.

இந்த ஆலை, 3.50 லட்சம் பேர் வரை பணியாற்றக்கூடிய வசதி கொண்டது. இது, உலகளவில் ஐபோனுக்கான மிகப் பெரிய ஆலையாகும். தற்போது, இங்கு இரண்டு லட்சம் பேர் வரை பணியாற்று வதாக கூறப்படுகிறது.

இந்நிலையில், ஜென்ஜோ நகரிலும் கொரோனா பரவல் அதிகரித்ததை அடுத்து, சீன அரசு ஊரடங்கு கட்டுப்பாடுகளை விதித்துள்ளது.

தைவானைச் சேர்ந்த பாக்ஸ்கான் நிறுவனம், இந்த ஆலையில் இருக்கும் ஊழியர்களை அங்கேயே தங்கி இருந்து பணியாற்றுமாறு கூறியுள்ளது.

ஆனால், ஆலை ஊழியர்களில் பலருக்கு கொரோனா பாதிப்பு ஏற்படவும், சில வாரங்களுக்கு முன், பல ஊழியர்கள் ஆலையிலிருந்து தப்பி வெளியேறி, தங்கள் வீடுகளுக்கு சென்றுவிட்டனர்.

இதன்பின், ஆலையில் போதுமான நோய் தடுப்பு உள்ளிட்ட பல்வேறு வசதிகள் செய்து தரப்படவில்லை என, ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர்.


சமூக வலைதளம்



இந்நிலையில், ஊழியர்களை போலீசார் கண்ணீர் புகை குண்டுகளை வீசி தடுத்து நிறுத்தும் வீடியோ, சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வருகிறது.

இதையடுத்து, ஊழியர்களின் போராட்டத்தால், ஆப்பிள் போன் தயாரிப்பு பெருமளவில் பாதிக்கப்படக்கூடும் என கருதப்படுகிறது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X