பெரியநாயக்கன்பாளையம் இணைப்பு சாலை; பணிகள் துவக்கம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் இணைப்பு சாலை பணி துவக்கப்பட்டுள்ளது.பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதல் வண்ணான் கோவில் பிரிவு வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி நடக்கிறது.இப்பணி தேசிய நெடுஞ்சாலை துறையின் ஆண்டு நிதி திட்டத்தில், 115 கோடி ரூபாய் செலவில் கடந்த, 2020ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது கார்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.
 பெரியநாயக்கன்பாளையம் இணைப்பு சாலை; பணிகள் துவக்கம்



பெ.நா.பாளையம் : பெரியநாயக்கன்பாளையத்தில் இணைப்பு சாலை பணி துவக்கப்பட்டுள்ளது.

பெரியநாயக்கன்பாளையத்தில் ராமகிருஷ்ணா மிஷன் வித்யாலயா முதல் வண்ணான் கோவில் பிரிவு வரை உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி நடக்கிறது.

இப்பணி தேசிய நெடுஞ்சாலை துறையின் ஆண்டு நிதி திட்டத்தில், 115 கோடி ரூபாய் செலவில் கடந்த, 2020ம் ஆண்டு துவக்கப்பட்டது. தற்போது கார்டர் அமைக்கும் பணி நடந்து வருகிறது.

மேம்பால கட்டுமான பணி நடப்பதால், கோவையில் இருந்து மேட்டுப்பாளையத்துக்கும், மேட்டுப்பாளையத்தில் இருந்து கோவைக்கும் செல்லும் வாகனங்கள், எல்.எம்.டபிள்யூ., பிரிவு வழியாக ரயில்வே பீடர் ரோடு அடைந்து, அங்கிருந்து இர்வின் ரோடு வழியாக மேட்டுப்பாளையம் ரோட்டை அடைகின்றன. இதில் ரயில்வே பீடர் ரோடு, இர்வின் ரோடுகளில் வாகனங்கள் அதிக அளவில் சென்றதால், பழுதடைந்து வாகனங்கள் செல்ல முடியாத நிலை ஏற்பட்டது.

இப்பிரச்னைக்கு தீர்வு காண கோரி, சில மாதங்களுக்கு முன் பெரியநாயக்கன்பாளையம் மேம்பால கட்டுமான பணியை பார்க்க வந்த மத்திய அமைச்சர் வி.கே.சிங்கிடம், கோவை வடக்கு பா.ஜ., வினர் கோரிக்கை மனு அளித்தனர்.

இதை ஏற்று தேசிய நெடுஞ்சாலை துறை ஆண்டு நிதி திட்டத்தில், 90 லட்சம் ரூபாய் ஒதுக்கப்பட்டது. தற்போது, இர்வின் ரோடு, ரயில்வே பீடர் ரோடு ஆகியவற்றை புதியதாக அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

தேசிய நெடுஞ்சாலை துறை அதிகாரிகள் கூறுகையில்,' பெரியநாயக்கன்பாளையம் உயர்மட்ட மேம்பாலம் கட்டுமான பணி, 2023 மார்ச் 31க்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

அதற்கான பணிகள் வேகப்படுத்தப்பட்டுள்ளன. ராமகிருஷ்ண வித்யாலயா மற்றும் வண்ணான் கோவில் பிரிவு ஆகிய இடங்களில் இறங்குதளங்களை அமைத்தால் பெரும்பாலான பணிகள் முடிவடைந்து விடும். வாகனங்கள் செல்லும் மாற்று பாதையில், 900 மீட்டர் நீளமுள்ள இர்வின் ரோடு, ரயில்வே பீடர் ரோடு ஆகியவை, 90 லட்சம் ரூபாய் செலவில், இரண்டு கட்டங்களாக போடப்படும்.

இதற்கான பணிகள் துவக்கப்பட்டுள்ளன. இப்பணி, 20 நாட்களுக்குள் முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் வாகனங்கள் தாராளமாக சென்று வரலாம்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X