இதே நாளில் அன்று

Added : நவ 23, 2022 | |
Advertisement
நவம்பர் 24, 1953 தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள விஷ்ணாம்பேட்டையில், 1896 ஏப்ரல், 16ல், பிராமண தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில், வரலாற்று பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின், சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். அதே பல்கலையில், வரலாறு மற்றும் தொல்லியல் துறை விரிவுரையாளராக
இதே நாளில் அன்று


நவம்பர் 24, 1953



தஞ்சாவூர் மாவட்டம், திருவையாறு அருகேயுள்ள விஷ்ணாம்பேட்டையில், 1896 ஏப்ரல், 16ல், பிராமண தம்பதிக்கு மகனாக பிறந்தவர் வி.ஆர்.ராமச்சந்திர தீட்சிதர். திருச்சி செயின்ட் ஜோசப் கல்லுாரியில், வரலாற்று பாடத்தில் இளநிலை பட்டப்படிப்பை முடித்தார். பின், சென்னை பல்கலையில் முனைவர் பட்டம் பெற்றார். அதே பல்கலையில், வரலாறு மற்றும் தொல்லியல் துறை விரிவுரையாளராக பணியாற்றினார்.

இந்திய வரலாறு, திராவிட வரலாறு, தமிழ், சமஸ்கிருத இலக்கியங்கள் மற்றும் வேதங்களில் புலமை பெற்றிருந்தார். சிலப்பதிகாரம், திருக்குறள் நுால்களை, அக்கால பின்புலத்துடன் ஆங்கிலத்தில் மொழி பெயர்த்தார். மவுரியர், குப்த அரசியல், பண்டைய இந்திய போர்களில் விமானம் மற்றும் பூமராங் பயன்பாடு, தமிழர்களின் தோற்றமும் பரவலும், சோழர்களின் கடல்வழி அறிவு, வரலாற்றுக்கு முற்பட்ட தென்னிந்தியா உள்ளிட்டவற்றை ஆராய்ந்து, நுால்களை எழுதினார்.

வெளிநாட்டு ஆய்வாளர்கள் இந்தியவியல் குறித்து, தெளிவான அறிவை பெற, தன் கடின உழைப்பால் ஆய்வு நுால்களை எழுதினார். பின், 1953ல் இதே நாளில், தன் 57வது வயதில் காலமானார். பிரிட்டிஷாரின் சென்னை மாகாணத்தில், கல்வியாளர், ஆய்வாளர், பேராசிரியராக வலம் வந்த தமிழரின் நினைவு தினம் இன்று!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X