மேம்பால கட்டுமான பணிகள்- எம்.எல்.ஏ., ஆய்வு

Added : நவ 23, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம் : மேட்டுப்பாளையம் ரோடு சுப்பிரமணியம்பாளையம் பிரிவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலபணிகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் ஆய்வு செய்தார்.கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, சுப்பிரமணியம்பாளையம் பிரிவில் மேம்பால கட்டுமான பணி கடந்த மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பாலத்தை ஒட்டியுள்ள இணைப்பு சாலை பழுதடைந்து உள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில்



பெ.நா.பாளையம் : மேட்டுப்பாளையம் ரோடு சுப்பிரமணியம்பாளையம் பிரிவில் கட்டப்பட்டு வரும் மேம்பாலபணிகளை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் ஆய்வு செய்தார்.

கோவை-மேட்டுப்பாளையம் ரோடு, சுப்பிரமணியம்பாளையம் பிரிவில் மேம்பால கட்டுமான பணி கடந்த மூன்று ஆண்டுகளாக ஆமை வேகத்தில் நடந்து வருகிறது. பாலத்தை ஒட்டியுள்ள இணைப்பு சாலை பழுதடைந்து உள்ளதால், வாகனங்கள் சென்று வருவதில் பெரும் சிரமம் நீடிக்கிறது.

இணைப்பு சாலையை விரைவில் செப்பனிட நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, பல்வேறு பொதுநல அமைப்புகள் சார்பில் அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

இந்நிலையில், மேம்பால கட்டுமான பணியை கவுண்டம்பாளையம் எம்.எல்.ஏ., அருண்குமார் பார்வையிட்டார். பின் தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகளிடம், பாலத்தின் கட்டுமான பணியை விரைவுபடுத்தி விரைவில் முடித்து, பொதுமக்களின் போக்குவரத்துக்கு ஏதுவாக திறந்து விட நடவடிக்கை எடுக்க வேண்டும் என, கேட்டுக்கொண்டார்.

ஆய்வின்போது, எம்.எல்.ஏ.,வுடன் அ.தி.மு.க., நிர்வாகிகள் உள்ளிட்ட பலர் உடனிருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X