பராமரிப்பில்லாத மைதானத்தை குத்தகைக்கு வழங்க கோரிக்கை

Added : நவ 23, 2022 | |
Advertisement
வால்பாறை : வால்பாறையில், விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதால், மைதானத்தை குத்தகைக்கு வழங்குமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுபையர், பாலமுருகன் ஆகியோர் நகராட்சி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:வால்பாறை நகராட்சி விளையாட்டு மைதானம், பல ஆண்டுகளாக

வால்பாறை : வால்பாறையில், விளையாட்டு மைதானத்தை சீரமைக்க நகராட்சி நிர்வாகம் தயக்கம் காட்டுவதால், மைதானத்தை குத்தகைக்கு வழங்குமாறு இளைஞர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வால்பாறை ஸ்போர்ட்ஸ் அகாடமி சங்கத்தின் ஒருங்கிணைப்பாளர் சுபையர், பாலமுருகன் ஆகியோர் நகராட்சி கமிஷனரிடம் கொடுத்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது:

வால்பாறை நகராட்சி விளையாட்டு மைதானம், பல ஆண்டுகளாக சீரமைக்கப்படாமல் உள்ளது. இந்நிலையில், விளையாட்டு வீரர்களின் நிண்ட கால கோரிக்கையை ஏற்று, கடந்த இரண்டு ஆண்டுகளுக்கு முன் டெண்டரும் விடப்பட்டது.

ஆனால், இன்று வரை இதற்கான பணி துவங்கப்படவில்லை. கல்லுாரி விளையாட்டு மைதானத்திலும் விளையாட்டு வீரர்கள் விளையாட அனுமதி மறுக்கப்படுகிறது.

விளையாட்டு வீரர்களை ஊக்குவிக்கும் வகையில், மைதானத்தை நகராட்சி சார்பில் உடனடியாக சீரமைக்க வேண்டும். இல்லாவிட்டால் குத்தகை அடிப்படையில், மைதானத்தை பராமரிக்கும் பொறுப்பை ஸ்போர்ட்ஸ் அகாடமியிடம் வழங்க வேண்டும்.

இவ்வாறு, மனுவில் தெரிவித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X