பேரூராட்சிக்கு பேட்டரி வாகனங்கள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் துாய்மை பணிகளை விரைவுப்படுத்த புதிதாக பத்து பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, 15 வார்டுகளில் தினமும், 10 'டன்' அளவில் குப்பை சேகரிக்கப்படுகின்றன. இவற்றை அந்தந்த பகுதியில் உள்ள குப்பை மையங்களுக்கு கொண்டு செல்ல, 2 பேட்டரி வாகனங்கள் மட்டுமே
 பேரூராட்சிக்கு பேட்டரி வாகனங்கள்

பெ.நா.பாளையம் : நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் துாய்மை பணிகளை விரைவுப்படுத்த புதிதாக பத்து பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சிக்குட்பட்ட, 15 வார்டுகளில் தினமும், 10 'டன்' அளவில் குப்பை சேகரிக்கப்படுகின்றன. இவற்றை அந்தந்த பகுதியில் உள்ள குப்பை மையங்களுக்கு கொண்டு செல்ல, 2 பேட்டரி வாகனங்கள் மட்டுமே பயன்பாட்டில் இருந்தன. தற்போது புதிதாக பத்து பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளன.

இதுகுறித்து, நரசிம்மநாயக்கன்பாளையம் பேரூராட்சி நிர்வாகத்தினர் கூறுகையில்,' வேகமாக வளர்ந்து வரும் பேரூராட்சிகளில், துாய்மை பணிகளை உடனுக்குடன் மேற்கொள்வது பெரும் சவாலாக உள்ளது. ஆட்கள் பற்றாக்குறை மற்றும் போதிய வாகன வசதி இல்லாததால், பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில் துாய்மை பணிகளை விரைவாக மேற்கொள்வதில் சிக்கல் ஏற்படுகின்றன.

தற்போது, பேட்டரி வாகனங்கள் வாங்கப்பட்டுள்ளதால், சுற்றுச்சூழல் பாதுகாப்பதோடு, அனைத்து சாலைகளிலும் எளிதாக சென்று குப்பையை எடுத்துக்கொண்டு, அந்தந்த குப்பை மையங்களுக்கு செல்ல முடியும். இதனால் துாய்மை பணிகள் விரைவில் மேற்கொள்ளலாம்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X