அன்னிய நேரடி முதலீடு ஆறு மாதங்களில் சரிவு

Added : நவ 23, 2022 | கருத்துகள் (2) | |
Advertisement
புதுடில்லி:அன்னிய நேரடி முதலீடு பங்கு வரத்து, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 14 சதவீதம் சரிந்துள்ளது. நடப்பு நிதியாண்டில், கடந்த ஆறு மாதங்களில், அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரத்து, 14 சதவீதம் சரிவு கண்டு, 2.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.இதுவே, கடந்த நிதிஆண்டின் இதே காலகட்டத்தில், முதலீடு
அன்னிய நேரடி முதலீடு , சரிவு

புதுடில்லி:அன்னிய நேரடி முதலீடு பங்கு வரத்து, கடந்த ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான காலத்தில், 14 சதவீதம் சரிந்துள்ளது.

நடப்பு நிதியாண்டில், கடந்த ஆறு மாதங்களில், அன்னிய நேரடி முதலீட்டு பங்கு வரத்து, 14 சதவீதம் சரிவு கண்டு, 2.21 லட்சம் கோடி ரூபாயாக உள்ளதாக, தொழில் மற்றும் உள்நாட்டு வர்த்தக மேம்பாட்டு துறை தெரிவித்துள்ளது.

இதுவே, கடந்த நிதிஆண்டின் இதே காலகட்டத்தில், முதலீடு 2.55 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

மேலும், இந்த ஆறு மாத காலத்தில், பங்கு முதலீடுகள், மறுமுதலீடு செய்யப்பட்ட வருவாய் மற்றும் பிற மூலதனம் ஆகியவற்றில் மேற்கொள்ளப்பட்ட மொத்த அன்னிய நேரடி முதலீடும், 3.20 லட்சம் கோடி ரூபாயாக குறைந்துள்ளது.

இதுவே, கடந்த நிதிஆண்டின் இதே காலாண்டில், 3.51 லட்சம் கோடி ரூபாயாக இருந்தது.

கடந்த ஆறு மாதங்களில், அன்னிய முதலீட்டை பொறுத்தவரை, சிங்கப்பூர் முதலிடத்தில் உள்ளது. இதற்கு அடுத்த இடங்களில் மொரீஷியஸ், ஐக்கிய அரபு அமீரகம். அமெரிக்கா, நெதர்லாந்து ஆகியவை உள்ளன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து (2)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
duruvasar - indraprastham,இந்தியா
24-நவ-202211:46:58 IST Report Abuse
duruvasar தமிழ்நாட்டில் தொடர்ந்து ஈர்த்துக்கொண்டே இருப்பாதால் , மற்ற இடங்களில் நீர்த்து போயிருக்கலாம் .
Rate this:
Cancel
24-நவ-202206:16:15 IST Report Abuse
அப்புசாமி செப்டம்பர் மாத வாக்கில் போட்ட முதலீட்டை லாபத்தோட எடுத்தாச்சு. இப்போ அக்டோபர், நவம்பரில் மீண்டும் முதலீடு செஞ்சு ஜனவரி, பிப்ரவரில அறுவடை செஞ்சுருவாங்க.
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X