காவடி குழுவின் அரங்கேற்ற விழா

Added : நவ 23, 2022 | |
Advertisement
கருமத்தம்பட்டி : செலம்பராயன்பாளையம் சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவின் காவடி ஆட்ட அரங்கேற்ற விழா நடந்தது.செலம்பராயன்பாளையத்தில் சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவினர், காவடி ஆட்ட பயிற்சி எடுத்து வந்தனர். பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமையிலான கலைக்குழுவினர் பயிற்சி அளித்தனர். பெண்கள், சிறுமிகள் அதிக அளவில் இக்குழுவில் உள்ளனர். இவர்களின் காவடி ஆட்ட அரங்கேற்ற விழா,
 காவடி குழுவின் அரங்கேற்ற விழா



கருமத்தம்பட்டி : செலம்பராயன்பாளையம் சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவின் காவடி ஆட்ட அரங்கேற்ற விழா நடந்தது.

செலம்பராயன்பாளையத்தில் சங்கமம் நாட்டுப்புற கலைக்குழுவினர், காவடி ஆட்ட பயிற்சி எடுத்து வந்தனர். பயிற்சியாளர் செந்தில்குமார் தலைமையிலான கலைக்குழுவினர் பயிற்சி அளித்தனர்.

பெண்கள், சிறுமிகள் அதிக அளவில் இக்குழுவில் உள்ளனர். இவர்களின் காவடி ஆட்ட அரங்கேற்ற விழா, செலம்பராயன்பாளையத்தில் உள்ள அழகீஸ்வரர் கோவில் வளாகத்தில் நடந்தது.

புதுக்கலைஞர்களை ஊக்கப்படுத்தும் வகையில், பல ஊர்களை சேர்ந்த காவடி ஆட்ட கலைஞர்கள், வள்ளி கும்மி ஆட்ட கலைஞர்கள் பங்கேற்று ஆடினர். காவடிகளுடன் பல்வேறு வகையான ஆட்டங்களை வெளிப்படுத்திய கலைஞர்கள், பார்வையாளர்களை பரவசப்படுத்தினர். நான்கு மணி நேரம் நடந்த விழாவில், பார்வையாளர்களும் கரவொலி எழுப்பி கலைஞர்களை உற்சாகப்படுத்தினர். கோவை வடக்கு மாவட்ட காங்., தலைவர் மனோகரன், மோப்பிரிபாளையம் பேரூராட்சி தலைவர் சசிக்குமார், பா.ஜ., விவசாய அணி தலைவர் நாகராஜ், பதுவம்பள்ளி ஊராட்சி தலைவர் சரவணன் உள்பட பலர் பங்கேற்று வாழ்த்தி பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X