சிறப்பு பகுதிகள்

சொல்கிறார்கள்

திட்டமிட்டு செய்தால் விவசாயமும் லாபமே!

Added : நவ 23, 2022 | கருத்துகள் (3) | |
Advertisement
தேனி மாவட்டம், எட்டப்ப ராஜபுரத்தைச் சேர்ந்த, இயற்கை விவசாயி ராஜு பரசுராமன்: சென்னையில் ஆசிரியராக வேலை பார்த்தேன். பணி ஓய்வுக்குப் பின் விவசாயம் பார்க்கலாம் என்று நினைத்து, சொந்த ஊருக்கே வந்து விட்டேன். எங்கள் பகுதியில் முருங்கை தான் பிரதான பயிர்; அதற்கு காரணம் வறட்சியை தாங்கும். அதனால், நானும் அதையே தேர்ந்தெடுத்தேன். எங்களின் பரம்பரை சொத்து, ௬ ஏக்கர். அதில், பள்ளபட்டி
சொல்கிறார்கள்

தேனி மாவட்டம், எட்டப்ப ராஜபுரத்தைச் சேர்ந்த, இயற்கை விவசாயி ராஜு பரசுராமன்: சென்னையில் ஆசிரியராக வேலை பார்த்தேன். பணி ஓய்வுக்குப் பின் விவசாயம் பார்க்கலாம் என்று நினைத்து, சொந்த ஊருக்கே வந்து விட்டேன்.

எங்கள் பகுதியில் முருங்கை தான் பிரதான பயிர்; அதற்கு காரணம் வறட்சியை தாங்கும். அதனால், நானும் அதையே தேர்ந்தெடுத்தேன்.

எங்களின் பரம்பரை சொத்து, ௬ ஏக்கர். அதில், பள்ளபட்டி முருங்கை வாங்கி ஒன்றரை ஏக்கரிலும், 2 ஏக்கரில், 'லக்னோ 49' ரக கொய்யாவையும் நடவு செய்தேன்.

கொய்யாவுக்கு இடையே, எலுமிச்சை, நெல்லி, மாதுளை, பப்பாளி என, பல வித பழ மரங்களையும் ஆங்காங்கே நட்டேன். ஒரே பயிராக இல்லாமல், பல பயிர்கள் இருந்தால், ஒரு பயிருக்கு விலை இல்லை என்றாலும், இன்னொரு பயிர் கை கொடுக்கும். பல பயிர் சாகுபடியில், இது நல்ல விஷயம்.

முருங்கைக்கு இடையே எடுத்த பள்ளத்தில், வெண்டை, கத்தரி, மிளகாய், பாகல், முள்ளங்கி, வெங்காயம் பயிர் பண்ணியிருக்கேன். இடையில் ஆங்காங்கே செண்டு மல்லி பூக்களையும் வைத்திருக்கிறேன். வாழையும் நடவு பண்ணி, அதுவும் மகசூலில் இருக்கு. பழ மரங்களை வணிக ரீதியாக வைக்கவில்லை; காய்கறிகளை தான் விற்பனை செய்கிறேன். விளையும் பழங்களில் பாதி பறவைகளுக்கு உணவாகி விடும்.

அதுபோக, வீட்டு தேவைகளுக்கு பயன்படுத்திக் கொள்வேன். மீதமுள்ளவற்றை மட்டுமே விற்பனைக்கு அனுப்புவேன். இதுதவிர, ௨ ஏக்கரில் தக்காளி சாகுபடி நடக்குது. ஆண்டு முழுதும் தக்காளி அறுவடை செய்கிற மாதிரி, நிலத்தை நாலு பாகமாக பிரித்திருக்கிறேன். ஒரு பாகத்துல அறுவடை நடந்துக்கிட்டு இருக்கும். அது முடியும் போது, அடுத்த பாகம் அறுவடைக்கு தயாராக இருக்கும்.

வாரத்தில் இரண்டு நாட்கள் தக்காளி அறுவடை செய்வேன். மொத்தம், 300 கிலோ மகசூல் கிடைக்கும். அதை சென்னையில் உள்ள ஆர்கானிக் கடைக்கு விற்பனைக்கு அனுப்புவேன்.

சந்தையில் என்ன விலை இருந்தாலும் கிலோவுக்கு, 30 ரூபாய் கொடுப்பாங்க. அந்த வகையில் மாதம், 1,500 கிலோ வரை அனுப்புவேன்.

முருங்கையும் ஆண்டுக்கு இரண்டு முறை மகசூல் கொடுக்கும். கொய்யாவும் மகசூல் கொடுக்கும்; அப்பப்ப வெங்காயம் போடுவேன். இது, எல்லாவற்றையும் சென்னைக்கு அனுப்புவேன்.

மொத்தத்தில் தக்காளி, கொய்யா, முருங்கை வாயிலாக, ஆண்டுக்கு, 7 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் வருமானம் கிடைக்குது.
தில், 2 லட்சத்து 32 ஆயிரம் ரூபாய் செலவு ஆனாலும், மீதம் 5 லட்சம் ரூபாய் லாபமாக நிற்கும்! முறையான திட்டமிடலோடு, தொழில்நுட்பங்களையும் இணைத்துக் கொண்டால், விவசாயமும் லாபகரமான தொழிலே!

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement
வாசகர் கருத்து (3)

  • புதியவை
  • பழையவை
  • அதிகம் விவாதிக்கப்பட்டவை
  • மிக மிக தரமானவை
  • மிக தரமானவை
  • தரமானவை
THINAKAREN KARAMANI - Vellore,இந்தியா
25-நவ-202200:03:37 IST Report Abuse
THINAKAREN KARAMANI இந்த விவசாயின் திட்டமிட்ட பயிர் சாகுபடியை விவசாயத்தில் ஆர்வமுடைய இளம் விவசாயிகளும், மற்ற விவசாயிகளும் இவரோடு கலந்துரையாடி,இவரின் விவசாய நிலங்களை நேரில்சென்று பார்த்து தங்கள்நிலங்களிலும் செயல்படுத்தினால் விவசாயிகள் அனைவரும் மிகுந்த பயனடையலாமே THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.
Rate this:
Cancel
ellar - New Delhi,இந்தியா
24-நவ-202222:12:24 IST Report Abuse
ellar மிகவும் சரியான கருத்து. நமது சிந்தனையை மாற்றினால் லாபம் கிடைக்க விவசாயத்தில் பல வாய்ப்புகள் உண்டு.
Rate this:
Cancel
Sridhar - Jakarta,இந்தோனேசியா
24-நவ-202215:08:33 IST Report Abuse
Sridhar இறங்கி செய்யவேண்டும் என்ற ஆசையை தூண்டுகிறது
Rate this:
Cancel

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X