ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி: காய்கறி, பழங்களில் பொம்மைகள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த, மக்கள் தொடர்பு முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், இடம் பெற்றிருந்த காய்கறிகள் மற்றும் பழங்களில் செய்த பொம்மைகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வாயிலாக, ஊட்டச்சத்து உணவுகள் உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது. காய்கறிகள், பழங்கள் போன்றவை
 ஊட்டச்சத்து விழிப்புணர்வு கண்காட்சி: காய்கறி, பழங்களில் பொம்மைகள்



பொள்ளாச்சி : பொள்ளாச்சியில் நடந்த, மக்கள் தொடர்பு முகாமில் ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், இடம் பெற்றிருந்த காய்கறிகள் மற்றும் பழங்களில் செய்த பொம்மைகள், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தது.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் வாயிலாக, ஊட்டச்சத்து உணவுகள் உட்கொள்வது குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

காய்கறிகள், பழங்கள் போன்றவை சாப்பிடுவதால் ஏற்படும் நன்மைகள், கர்ப்ப காலத்தில் பின்பற்ற வேண்டிய வழிமுறைகள் குறித்தும் அங்கன்வாடி ஊழியர்கள் வாயிலாக விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இந்நிலையில், பொள்ளாச்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமில், வடக்கு ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்டம் சார்பில், காய்கறிகள் மற்றும் பழங்கள் உட்கொள்வதால் ஏற்படும் நன்மைகள் குறித்து விளக்கும் வகையில், கண்காட்சியாக விழிப்புணர்வு பதாகைகள் வைக்கப்பட்டு இருந்தன.

மேலும், காய்கறிகள், பழங்களை கொண்டு, ஊட்டச்சத்து மரம் மற்றும் காய்கறி மனிதன், கொக்கு உள்ளிட்ட பறவைகள், உயிரினங்களை தத்ரூபமாக செய்து வைத்து இருந்தனர். உயிருள்ள பறவைகள் போன்று காட்சியளித்ததால், பார்வையாளர்களை வெகுவாக கவர்ந்தன.

ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சி திட்ட அதிகாரிகள் கூறுகையில், 'பொதுமக்களிடம், ஊட்டச்சத்து உணவின் அவசியம் குறித்து விளக்கும் வகையில், மக்கள் தொடர்பு முகாமில் கண்காட்சி நடத்தப்பட்டது.

காய்கறிகளை கொண்டு பொம்மைகள் வடிவமைத்து வைத்து, அவற்றின் பயன் குறித்து விளக்கமளிக்கப்பட்டது. காய்கறி, பழ வகைகளை உணவில் அதிகளவில் சேர்த்துக்கொள்ள வேண்டும். அப்போது தான், உடலுக்கு தேவையான ஊட்டச்சத்துகள் சரிவிகிதத்தில் கிடைக்கும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X