'லால்பகதுார் சாஸ்திரிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை'

Added : நவ 23, 2022 | |
Advertisement
சென்னை:''இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த, முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரிக்கு, உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில், மத்திய பொதுப்பணித்துறை சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின், 9.5 அடி உயர, முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.நேற்று, இந்த
 'லால்பகதுார் சாஸ்திரிக்கு அங்கீகாரம் கிடைக்கவில்லை'

சென்னை:''இந்தியாவின் வளர்ச்சிக்கு அடித்தளம் அமைத்த, முன்னாள் பிரதமர் லால் பகதுார் சாஸ்திரிக்கு, உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை,'' என, தமிழக கவர்னர் ரவி தெரிவித்தார்.

சென்னை, நுங்கம்பாக்கம் சாஸ்திரி பவன் வளாகத்தில், மத்திய பொதுப்பணித்துறை சார்பில், மறைந்த முன்னாள் பிரதமர் லால்பகதுார் சாஸ்திரியின், 9.5 அடி உயர, முழு உருவ வெண்கல சிலை அமைக்கப்பட்டு உள்ளது.

நேற்று, இந்த சிலையை திறந்து வைத்து, தமிழக கவர்னர் ரவி பேசியதாவது:

நாட்டின் இரண்டாவது பிரதமரான சாஸ்திரி, எளிமைக்கு பெயர் பெற்றவர். எத்தனை கஷ்டங்களை சந்தித்தபோதும், அரசியல் வாழ்விலும், ஆட்சி நிர்வாகத்திலும் அர்ப்பணிப்பு உணர்வுடன் செயல்பட்டவர்.

அவர் பிரதமராக இருந்தபோது, இந்திய - பாகிஸ்தான் இடையே போர் ஏற்பட்டது. உணவு பொருட்கள் தட்டுப்பாட்டால் வறுமையும் இருந்தது.

'போரை நிறுத்தாவிட்டால், உணவு பொருட்கள் அனுப்புவதை நிறுத்தி விடுவோம்' என, சில நாடுகள் எச்சரித்தன. ஆனாலும், நாட்டின் பாதுகாப்பில் அவர் எந்த சமரசமும் செய்து கொள்ளவில்லை.

ஆங்கிலேயர்கள் இந்தியாவை விட்டு வெளியேறியபோது, அமைதி வழியை பின்பற்றினால் நாடு பாதுகாப்பானதாக இருக்கும் என, கருதினோம். இதனால், ராணுவத்தை வலுப்படுத்தவில்லை. இதனால், அண்டை நாடுகளுடனான போரில், காஷ்மீர், சியாச்சினில் பல பகுதிகளை இழந்தோம்.

இந்தியா பாதுகாப்பாக இருக்க வேண்டுமானால், ராணுவம் வலிமையாக இருக்க வேண்டும் என்பதை உணர்ந்து, நம் ராணுவத்தை சாஸ்திரி வலிமைப்படுத்தினார்.

விடுதலைக்குப் பின், இந்தியாவை மறு கட்டமைப்பு செய்து, நாட்டின் இன்றைய வளர்ச்சிக்கு வலுவான அடித்தளமிட்டவர் சாஸ்திரி.

நாட்டுக்கு என்ன தேவை என்பதை உணர்ந்து, தொலைநோக்குப் பார்வை யுடன் திட்டங்களை செயல்படுத்தினார்.

இந்தியா மீதான பார்வையில் மாற்றங்களை ஏற்படுத்தியவரும், அவர் தான். வறுமையை ஒழிக்க, உணவு உற்பத்தியில் கவனம் செலுத்தினார். பசுமை புரட்சிக்கு வித்திட்டவரும் அவர் தான்.

'ஜெய் ஜவான், ஜெய் கிசான்' என்ற அவரது முழக்கம், கோடிக்கணக்கான இந்தியர்களுக்கு பெரும் உத்வேகத்தை அளித்தது.

நாட்டுக்காக பெரும் பங்களிப்பு செய்த சாஸ்திரிக்கு கிடைக்க வேண்டிய உரிய அங்கீகாரம் கிடைக்கவில்லை.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில், சாஸ்திரியின் மகனும், லால் பகதுார் சாஸ்திரி தேசிய நினைவு அறக்கட்டளை தலைவருமான அனில்குமார் சாஸ்திரி, சாஸ்திரியின் மற்றொரு மகன் சுனில் சாஸ்திரி, மத்திய பொதுப்பணித்துறை சிறப்பு இயக்குனர் ஜெனரல் ராஜேஷ்குமார் கவுசல் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X