அலுவலர்கள் விடுப்பு போராட்டம் ; அலுவலக பணிகள் முடக்கம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
அன்னுார் : ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால், நேற்று ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.ஊரக வளர்ச்சித் துறையில் விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார
 அலுவலர்கள் விடுப்பு போராட்டம் ; அலுவலக பணிகள் முடக்கம்

அன்னுார் : ஊரக வளர்ச்சித் துறை அலுவலர்கள் வேலை நிறுத்தத்தால், நேற்று ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

ஊரக வளர்ச்சித் துறையில் விடுமுறை தின ஆய்வு, இரவு நேர ஆய்வு ஆகியவற்றை கைவிட வேண்டும். ஊராட்சி செயலர்கள் அனைவருக்கும் கருவூலம் வாயிலாக சம்பளம் வழங்க வேண்டும். நுாறு நாள் வேலை திட்டத்தில் பணியாற்றும் இளநிலை உதவியாளர்கள் மற்றும் வட்டார சுகாதார ஒருங்கிணைப்பாளர்களை பணி வரன்முறை செய்ய வேண்டும்.

பல ஆயிரம் காலி பணியிடங்களை நிரப்ப வேண்டும். பதவி உயர்வு ஆணைகளை தாமதம் இல்லாமல் வெளியிட வேண்டும் என்பது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி நேற்று மற்றும் இன்று ஒட்டுமொத்த விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபடுவதாக அறிவித்தனர்.

இதன்படி அன்னுார் ஒன்றிய அலுவலகத்தில், 13 பேரும், சர்க்கார் சாமக்குளம் ஒன்றியத்தில், 27 பேரும் பணிக்கு வரவில்லை. காரமடையில், 12 பேரும், பெரியநாயக்கன்பாளையம் ஒன்றியத்தில், 22 பேரும், சூலுாரில், 20 பேரும், சுல்தான் பேட்டையில், 13 பேரும் விடுமுறை எடுத்து நேற்று போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் ஊராட்சி ஒன்றிய அலுவலகங்களில் பணிகள் பாதிக்கப்பட்டன.

தமிழ்நாடு ஊரக வளர்ச்சி துறை அலுவலர்கள் சங்க மாநில செயலாளர் செந்தில்குமார், மாவட்ட தலைவர் முத்துராஜு, செயலாளர் மாசானம் கூறுகையில்,'கோவை மாவட்டத்தில் ஒன்றிய அலுவலகங்களில், 196 பேரும், ஊராட்சி செயலர்களில், 60 பேரும் விடுமுறை எடுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X