சத்ய சாய்பாபா 97வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை

Added : நவ 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், சத்யசாய்பாபாவின், 97வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், சத்யசாய் பாபாவின், 97வது பிறந்த நாள் விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. கொடியேற்றுதல், மங்கள ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன.கடந்த, இரண்டு நாட்களாக சிறப்பு பூஜைகள், 97 சிறப்பு சாய் பஜனை
 சத்ய சாய்பாபா 97வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜை



பொள்ளாச்சி : பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், சத்யசாய்பாபாவின், 97வது பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

பொள்ளாச்சி சத்யசாய் சேவா சமிதியில், சத்யசாய் பாபாவின், 97வது பிறந்த நாள் விழா கடந்த, 19ம் தேதி துவங்கியது. கொடியேற்றுதல், மங்கள ஆரத்தி மற்றும் பிரசாதம் வழங்குதல் நிகழ்ச்சிகள் நடந்தன.

கடந்த, இரண்டு நாட்களாக சிறப்பு பூஜைகள், 97 சிறப்பு சாய் பஜனை பாடல்கள் பகவானின் திருப்பாதங்களில் அர்ப்பணிப்பு நிகழ்வு, திருப்புகழ், சிவபுராணம் இசை நிகழ்ச்சியும் நடந்தது. நேற்று முன்தினம் மாலையில் சிறப்பு சாய்பஜன் மற்றும் சத்சங்கம், மங்கள ஆரத்தியும் நடந்தது.

நேற்று சத்யசாய்பாபாவின் பிறந்தநாளை முன்னிட்டு, காலை, 5:00 மணிக்கு ஓம்காரம், சுப்ரபாதம், நகர சங்கீர்த்தனம் நடந்தது. காலை, 6:00 மணிக்கு சாய் காயத்ரி மந்த்ர பாராயணம், காலை, 9:00 மணிக்கு சுயம்வர பார்வதி கலா ேஹாமமும் நடந்தது.

திரளான பக்தர்கள் பங்கேற்று, சாய்பாபாவை வணங்கினர். தொடர்ந்து மதியம், 12:00 மணிக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. தொடர்ந்து மாலையில், சிறப்பு பக்தி இன்னிசை நிகழ்ச்சி நடந்தது.

* வால்பாறை கக்கன் காலனி சத்யசாய் சமிதி சார்பில், பகவான் சத்யசாய் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது. விழாவை முன்னிட்டு, நேற்று காலை, சிறப்பு அபிேஷக, அலங்கார பூஜை நடந்தது. அதன்பின் சிறப்பு பஜன், கற்பூர ஆரத்தி, பிரசாதம் வழங்கல் உள்ளிட்ட நிகழ்ச்சிகள் நடந்தன.

தொடர்ந்து குழந்தைகளின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. விழாவுக்கான ஏற்பாடுகளை சத்யசாய் சமிதியின் கன்வீனர் சண்முகவேல், ஒருங்கிணைப்பாளர் வக்கீல் முத்துசாமி உள்ளிட்ட நிர்வாகிகள் செய்திருந்தனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X