வட்டமலைபாளையம் சாலை! வட்ட, வட்டமாய் ஓட்டை

Added : நவ 23, 2022 | |
Advertisement
பெ.நா.பாளையம் : வட்டமலைபாளையம் கிராமம் செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.துடியலுாரில் இருந்து என்.ஜி.ஜி.ஓ., காலனி வழியாக வட்டமலைபாளையம் செல்லும் சாலை, ஏற்கனவே பழுதாகி இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் இச்சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும்
 வட்டமலைபாளையம் சாலை! வட்ட, வட்டமாய் ஓட்டை

பெ.நா.பாளையம் : வட்டமலைபாளையம் கிராமம் செல்லும் சாலை பழுதடைந்து உள்ளதால், வாகன ஓட்டிகள் பெரும் சிரமத்துக்குள்ளாகி வருகின்றனர்.

துடியலுாரில் இருந்து என்.ஜி.ஜி.ஓ., காலனி வழியாக வட்டமலைபாளையம் செல்லும் சாலை, ஏற்கனவே பழுதாகி இருந்தது. சமீபத்தில் பெய்த மழையால் இச்சாலையில் ஆங்காங்கே தண்ணீர் தேங்கி நின்றது. இதனால் இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களில் செல்பவர்கள் பெரும் சிரமத்துக்கு ஆளாகி வருகின்றனர். சாலையை விரைவில் செப்பனிட்டு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என, பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

இதுகுறித்து, இப்பகுதியை சேர்ந்த பொதுமக்கள் கூறுகையில்,'இச்சாலை வழியாக தனியார் கல்வி நிறுவனங்களுக்கு தினமும் நுாற்றுக்கணக்கான பேர் சென்று வருகின்றனர். இச்சாலை வழியாக சரவணம்பட்டி அடைந்து அங்கிருந்து, சத்தி சாலையையும் அங்கிருந்து, அவிநாசி சாலையையும் எளிதாக அடையலாம். பழுதான சாலையை விரைந்து செப்பனிட வேண்டும்' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X