வீரபத்திர சுவாமி கோவிலில் திருப்பணி துவங்க ஏற்பாடு

Added : நவ 23, 2022 | |
Advertisement
காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், நெல்லுக்கார தெருவில், வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.தற்போது திருப்பணி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உபயதாரர்கள் தங்களால் இயன்ற பணி பொறுப்பை எடுத்து செய்யலாம் என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு
 வீரபத்திர சுவாமி கோவிலில் திருப்பணி துவங்க ஏற்பாடு

காஞ்சிபுரம்:காஞ்சிபுரம், நெல்லுக்கார தெருவில், வீரபத்திர சுவாமி கோவில் உள்ளது. ஹிந்து சமய அறநிலையத் துறை நிர்வாகத்தின் கீழ் இந்த கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேகம் நடந்து 30 ஆண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது.

தற்போது திருப்பணி துவங்க திட்டமிடப்பட்டுள்ளது. இதனால் உபயதாரர்கள் தங்களால் இயன்ற பணி பொறுப்பை எடுத்து செய்யலாம் என, கோவில் நிர்வாகம் சார்பில் அறிவிப்பு செய்துள்ளனர்.

இது குறித்து கோவில் செயல் அலுவலர் ஸ்ரீதர் கூறியதாவது:

கோவிலுக்கு சொந்தமான இடங்கள் பேருந்து நிலையம் பகுதியில் உள்ளது. இதில் பல இடங்கள் ஆக்கிரமிப்பு செய்யப்பட்டுள்ளன. அந்த இடத்தை மீட்பதற்கு வழக்கு தொடரப்பட்டுள்ளது.

கோவிலில் வருமானம் இல்லாததால் உபயதாரர்களை அனுகி இருக்கிறோம். கோவில் கருங்கல் துாண்கள் புதுப்பித்தல், உத்திரம் மற்றும் சன்னிதி முழுமையாக சுத்தம் செய்யப்பட இருக்கிறது.

கோவில் உட்புறம் மற்றும் வெளிபிரகாரத்தில் கருங்கல் தரை தளம் அமைத்தல் மற்றும் புதுப்பித்தல், கோவில் கதவு புதிதாக செய்தல் போன்ற பணிகளுக்கு மதிப்பீடு செய்யப்பட்டுள்ளது.

இந்த பணிகளை உபயதாரர்கள் செய்ய முன் வருபவர்கள், நிர்வாகத்தை அனுகினால் அதற்கான விளக்கம் அளிக்கப்படும். கோவில் திருப்பணி கார்த்திகை மாதம் இறுதிக்குள் துவங்க இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X