வக்கீலுக்கு 3வது முறை ஜாமின் மனு 'டிஸ்மிஸ்'

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : கூலிப்படை ஏவி தாக்கிய வழக்கில், கைதான வக்கீல் ஜாமின் மனு, மாவட்ட நீதிமன்றம் 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டது.கோவை, சத்தி ரோட்டிலுள்ள, டாக்டர் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான எல்லன் மருத்துவமனையை, சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் குத்தகைக்கு எடுத்து, சென்னை மருத்துவமனை என்ற பெயரில் நடத்தினார். இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மருத்துவமனை மீது கூலிப்படை



கோவை : கூலிப்படை ஏவி தாக்கிய வழக்கில், கைதான வக்கீல் ஜாமின் மனு, மாவட்ட நீதிமன்றம் 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டது.

கோவை, சத்தி ரோட்டிலுள்ள, டாக்டர் ராமச்சந்திரன் என்பவருக்கு சொந்தமான எல்லன் மருத்துவமனையை, சென்னையை சேர்ந்த டாக்டர் உமாசங்கர் குத்தகைக்கு எடுத்து, சென்னை மருத்துவமனை என்ற பெயரில் நடத்தினார்.

இருவருக்கும் ஏற்பட்ட பிரச்னையில் மருத்துவமனை மீது கூலிப்படை ஏவி தாக்குதல் நடத்தப்பட்டது.

இது தொடர்பாக, 13 பேர் கைது செய்யப்பட்டு ஜாமினில் விடுவிக்கப்பட்டனர். தாக்குதல் தொடர்பாக, வக்கீல் எஸ்.பி.ராஜேந்திரன் கடந்த மாதம் 31ல், கைதானார். இவரது ஜாமின் மனு, சி.ஜே.எம்., கோர்ட்டில் இரண்டு முறை தள்ளுபடி செய்யப்பட்டது.

அதனால், கோவை மாவட்ட முதன்மை செஷன்ஸ் கோர்ட்டில் மீண்டும் மனு தாக்கல் செய்தார். விசாரித்த நீதிபதி ராஜசேகர், வக்கீல் ஜாமின் மனுவை 'டிஸ்மிஸ்' செய்து உத்தரவிட்டார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X