சாயப்பட்டறையில் குப்பை மயத்தால் சுகாதாரம் பாதிப்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
குப்பை அகற்றப்படவில்லைஆண்டியக்கவுண்டனுார் ஊராட்சி அமராவதிநகர் அருகே சாயப்பட்டறையில் குப்பை கடந்த ஒரு வாரமாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நாய்களும் குப்பையில் உள்ள உணவு கழிவுகளை உண்ண வட்டமிடுகின்றன. இந்த குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.- பிரேம்பாபு, சாயப்பட்டறை. வீணாகும் குடிநீர்தளி, அம்மாபட்டி
 சாயப்பட்டறையில் குப்பை மயத்தால் சுகாதாரம் பாதிப்பு




குப்பை அகற்றப்படவில்லை



ஆண்டியக்கவுண்டனுார் ஊராட்சி அமராவதிநகர் அருகே சாயப்பட்டறையில் குப்பை கடந்த ஒரு வாரமாக அகற்றப்படாமல் உள்ளது. இதனால் துர்நாற்றம் வீசுகிறது. நாய்களும் குப்பையில் உள்ள உணவு கழிவுகளை உண்ண வட்டமிடுகின்றன. இந்த குப்பையை அகற்ற ஊராட்சி நிர்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- பிரேம்பாபு, சாயப்பட்டறை.


வீணாகும் குடிநீர்



தளி, அம்மாபட்டி கரிசல்குளம் அருகே, சுற்று வட்டார கிராமங்களுக்கு குடிநீர் கொண்டு செல்லும், மெயின் குழாய் உடைந்து தண்ணீர் வீணாகி வருகிறது. இதுகுறித்து குடிநீர் வடிகால் வாரிய அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

- தினேஷ், உடுமலை.


போக்குவரத்துக்கு இடையூறு



உடுமலை, பழநி கழுத்தறுத்தான் பள்ளம் பகுதியில், உள்ள மண் வெளியே எடுக்கப்பட்டு கொட்டப்பட்டுள்ளது. அந்த மண் வேறு இடத்திற்கு கொண்டு செல்லப்படாததால், போக்குவரத்துக்கு இடையூறாக உள்ளது. இந்த மண்ணை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- சுப்புராஜ், உடுமலை.


பாலத்தை சீரமைக்கணும்



உடுமலை, பழநி ரோடு - ஸ்ரீ நகர் சந்திப்பில் தரை மட்டப்பாலம் உள்ளது. இப்பாலம் சேதமடைந்து காணப்படுகிறது. மழை நேரங்களில் இப்பாலம் முழுவதும் தண்ணீர் சூழ்ந்து விடுகிறது. இதனால், இதில் மக்கள் நடமாட முடிவதில்லை. இப்பாலத்தை சீரமைக்க வேண்டும்.

- சுந்தரம், உடுமலை.


நிழற்கூரை அமைக்கணும்



உடுமலை, எஸ்.வி. புரத்தில், சாலை விரிவாக்கப்பணியின் போது, நிழற்கூரை அகற்றப்பட்டது. பணிகள் முடிந்த பின், நிழற்கூரை அமைக்கப்படவில்லை. இதனால், மக்கள் நீண்டநேரம் வெயிலிலும், மழையிலும் நிற்க வேண்டியதுள்ளது. அங்கு நிழற்கூரை அமைக்க வேண்டும்.

- பாலகிஷ்ணன், உடுமலை.


விபத்து வாய்ப்பு



உடுமலை பஸ் ஸ்டாண்ட் எதிரில், ரவுண்டானாவில் வாகனங்கள் தாறுமாறாக செல்கின்றன. இதனால், பொதுமக்கள் ரோட்டை கடக்க அச்சமடைந்துள்ளனர். விபத்துகளும் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை போலீசார் கட்டுப்படுத்த வேண்டும்.

- சுரேஷ், உடுமலை.


ஆக்கிரமிப்புகளை அகற்றணும்



உடுமலை, அனுஷம் ரோட்டில் நுழைவாயிலில், மாலை, நேரங்களில் தற்காலிக ஆக்கிரமிப்புகள் அதிக அளவில் காணப்படுகின்றன. இதனால், போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. இந்த ஆக்கிரமிப்புகளை அதிகாரிகள் அகற்ற வேண்டும்.

- ராமு, உடுமலை.


கழிவுகளால் அடைப்பு



உடுமலை ராஜேந்திரா ரோடு அரசு மேல்நிலைப்பள்ளி வெளிப்புற சாக்கடையில், குப்பை, பிளாஸ்டிக் போடப்படுகின்றன. இதனால், கழிவுநீர் செல்ல முடியாமல் தேங்கி விடுகிறது. எனவே இந்த சாக்கடையை துார்வார அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- ராமசாமி, உடுமலை.


ரவுண்டானா வேண்டும்



உடுமலை, பொள்ளாச்சி சாலையில், முக்கோணம் பஸ் நிறுத்தம் உள்ளது. இங்கு மூன்று ரோடுகள் சந்திப்பதால், போக்குவரத்து மிகுந்து காணப்படுகிறது. வேகமாக வரும் வாகனங்களை கட்டுப்படுத்தும் வகையில், இங்கு ரவுண்டானா அமைக்க நெடுஞ்சாலைத்துறையினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கருப்புசாமி, உடுமலை.


பூங்காவை பராமரிக்கணும்



திருமூர்த்தி அணை அருகே பொதுப்பணித்துறை சார்பில் பொழுதுபோக்கு பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. அந்த பூங்கா பராமரிக்கப்படாததால், பொலிவிழந்து காணப்படுகிறது. இந்த பூங்காவை சீரமைக்க வேண்டும்.

- ரஞ்சித், உடுமலை.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X