பள்ளிகளில் கலைத்திருவிழா துவக்கம்; திறனை வெளிப்படுத்திய மாணவர்கள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
உடுமலை : உடுமலையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, கலைத்திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.அதன்படி, 6 முதல் 8ம் வகுப்பு; 9, 10ம் வகுப்பு; பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், கலைத்திருவிழா நேற்று துவங்கியது. பள்ளி
 பள்ளிகளில் கலைத்திருவிழா துவக்கம்; திறனை வெளிப்படுத்திய மாணவர்கள்



உடுமலை : உடுமலையில், அரசு மற்றும் உதவிபெறும் பள்ளிகளில், ஆறு முதல், பிளஸ் 2 வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு, கலைத்திருவிழா போட்டிகள் நடத்த திட்டமிடப்பட்டது.

அதன்படி, 6 முதல் 8ம் வகுப்பு; 9, 10ம் வகுப்பு; பிளஸ் 1, பிளஸ் 2 என, மூன்று பிரிவுகளாக போட்டிகள் நடத்தப்படுகின்றன.அதன்படி, உடுமலை மற்றும் சுற்றுப்பகுதிகளில் உள்ள அரசுப்பள்ளிகளில், கலைத்திருவிழா நேற்று துவங்கியது. பள்ளி அளவில், கவின்கலை, வாய்ப்பாட்டு கருவி இசை, நடனம், நாடகம், மொழித்திறன் ஆகிய தலைப்புகளில் போட்டி நடத்தப்பட்டு மாணவர்கள் தேர்வு செய்யப்பட்டு வருகின்றனர்.

அதன்படி, உடுமலை பாரதியார் நுாற்றாண்டு அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவை, தலைமையாசிரியர் விஜயா துவக்கி வைத்தார். உதவி தலைமையாசிரியர் ஜெயராஜ் முன்னிலை வகித்தார்.

சிறப்பு விருந்தினராக கவுன்சிலர் விஜயலட்சுமி கலந்து கொண்டார். முன்னதாக, ஆசிரியர் சின்னராசு, வரவேற்றார். குழு நடனம், தனிநபர் நடனம் என மாணவியர் தங்களின் திறமைகளை வெளிக்காட்டினர். ஆசிரியர்கள் ராஜேந்திரன், விஜயலட்சுமி ஆகியோர் போட்டிகளை ஒருங்கிணைத்தனர்.

* குடிமங்கலம் அரசு மேல்நிலைப் பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் பழனிசாமி தலைமை வகித்தார். தொடர்ந்து, மாணவ, மாணவியர் தனி நபர் நடனம், குழு நடனம், நடிப்பு என பல்வேறு போட்டிகளில் கலந்து கொண்டனர்.

உதவி தலைமையாசிரியர்கள் பத்மகீதா, சக்திவேல்ராஜா, ஆசிரியர்கள் ஆனந்தி, ஜெகதீஸ்வரி, ஆனந்தசெல்வி, தியாகராஜன், பிரேமா ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.

* கொமரலிங்கம் அரசு மேல்நிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் மாரியப்பன் தலைமை வகித்தார். ஓவியம், களிமண் சிற்பம் மற்றும் காகிதக்கூழ் பொம்மை செய்தல் போட்டி நடத்தப்பட்டது. பொறுப்பு ஆசிரியர்கள் மாரிமுத்து, மயில்சாமி, மதன்குமார் ஆகியோர் போட்டியை ஒருங்கிணைத்தனர்.

* போடிப்பட்டி ஊராட்சி ஒன்றிய நடுநிலைப்பள்ளியில் நடந்த விழாவில், தலைமையாசிரியர் லதா தலைமை வகித்தார். போட்டிகளை, வட்டாரக்கல்வி அலுவலர் ஆறுமுகம் துவக்கி வைத்தார். அதன்படி, தனிநபர் மற்றும் குழு நடனம், ஓவியம், அழகு கையெழுத்து என போட்டிகள் நடத்தப்பட்டன. போட்டியை, ஆசிரியர் மோகனா ஒருங்கிணைத்தார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X