விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர்கள் 'ஜிம்னாஸ்டிக்கில்' அபாரம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : கோவை வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவு மாணவர்கள், 76 பதக்கங்கள் வென்று அசத்தினர்.பள்ளி கல்வித்துறை சார்பில் நடக்கும், மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி, நேற்று நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் அரங்கில் நடந்தது. இதில் மாணவ மாணவியருக்கு, 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், பார்,
 விளையாட்டு மேம்பாட்டு ஆணைய மாணவர்கள் 'ஜிம்னாஸ்டிக்கில்' அபாரம்



கோவை : கோவை வருவாய் மாவட்ட அளவிலான மாணவர்களுக்கான ஜிம்னாஸ்டிக் போட்டியில், விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவு மாணவர்கள், 76 பதக்கங்கள் வென்று அசத்தினர்.

பள்ளி கல்வித்துறை சார்பில் நடக்கும், மாவட்ட அளவிலான ஜிம்னாஸ்டிக் போட்டி, நேற்று நேரு ஸ்டேடியத்தில் உள்ள ஜிம்னாஸ்டிக் அரங்கில் நடந்தது.

இதில் மாணவ மாணவியருக்கு, 14, 17 மற்றும் 19 ஆகிய வயது பிரிவின் அடிப்படையில், பார், பீம், வால்ட், பொம்மல் குதிரை உள்ளிட்ட பல்வேறு போட்டிகள் நடத்தப்பட்டன.

இப்போட்டியில், கோவை வருவாய் மாவட்டத்துக்குட்பட்ட பள்ளிகளை சேர்ந்த, 200க்கும் மேற்பட்ட மாணவ - மாணவியர் பங்கேற்றனர்.

இப்போட்டியில், தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் கோவை பிரிவில் பயிற்சி பெற்று வரும் மாணவ மாணவியர் பங்கேற்று, 32 தங்கம், 22 வெள்ளி மற்றும் 22 வெண்கலப்பதக்கம் என் 76 பதக்கங்கள் வென்றனர்.

பதக்கங்கள் வென்ற மாணவர்களை, கோவை மாவட்ட விளையாட்டு அலுவலர் ரகுகுமார் மற்றும் ஜிம்னாஸ்டிக் பயிற்சியாளர் சையது இப்ராகிம் ஆகியோர் பாராட்டினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X