பாதிப்புகளை நிவர்த்தி செய்து தாருங்கள்; அமைச்சுப் பணியாளர்கள் முறையீடு

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : அரசாணையில் மாநகராட்சி அமைச்சுப்பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு, நகராட்சி நிர்வாகத் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது.தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கம்(கோவை), மதுரை மாநகராட்சி எழுத்தர்கள் சங்கம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கம்(சென்னை), அனைத்து மாநகராட்சி அமைச்சுப்



கோவை : அரசாணையில் மாநகராட்சி அமைச்சுப்பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்து உத்தரவு பிறப்பிக்குமாறு, நகராட்சி நிர்வாகத் துறையிடம் முறையிடப்பட்டுள்ளது.

தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்கம்(கோவை), மதுரை மாநகராட்சி எழுத்தர்கள் சங்கம், தமிழ்நாடு நகராட்சி, மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கம்(சென்னை), அனைத்து மாநகராட்சி அமைச்சுப் பணியாளர்கள் சங்கங்கள் சார்பில், ரயில்வே ஸ்டேஷன் அருகே தாமஸ் கிளப்பில் சிறப்புக்கூட்டம் நடந்தது.

கூட்டத்தில் அரசாணை, 152ல், ஏற்கனவே இருந்த அமைச்சுப்பணியாளர்கள் பதவிகளான கணக்கு அலுவலர், உதவியாளர் உள்ளிட்ட பணியிடங்களின் எண்ணிக்கை குறைக்கப்பட்டுள்ளது. இதை பழையபடி உயர்த்தி அனுமதிக்க வேண்டும்.

புதிய ஒருங்கிணைந்த பணி விதிகள் வெளியிடப்படும் வரை, அந்தந்த மாநகராட்சியில் தற்போது பணிபுரியும் அமைச்சு பணியாளர்களையே, அவர்களது பணிமூப்பின் படி பதவி உயர்வு அல்லது பணி மாறுதல் வாயிலாக நியமிக்க வேண்டும் என்பன உள்ளிட்ட, பல்வேறு கோரிக்கைகள் தீர்மானங்களாக நிறைவேற்றப்பட்டன.

தமிழ்நாடு மாநகராட்சி அமைச்சுப் பணியாளர் சங்க தலைவர் சுப்ரமணியன் கூறுகையில், ''அரசாணை, 152ல் மாநகராட்சி அமைச்சுப்பணியாளர்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்புகளை நிவர்த்தி செய்யவே, நாங்கள் வேண்டுகோள் விடுக்கிறோம். மற்றபடி ரத்து செய்யக்கோரவில்லை.

எங்களது கோரிக்கைகளை தீர்மானங்களாக நிறைவேற்றி, நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறை கூடுதல் தலைமை செயலர், நகராட்சி நிர்வாக இயக்குனர் ஆகியோருக்கு அனுப்பி உள்ளோம்,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X