சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா; நலத்திட்ட உதவிகள் வினியோகம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
உடுமலை : பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 97வது, ஜெயந்தி விழாவையொட்டி, உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.உடுமலை ஸ்ரீ சத்யசாய் ஆன்மிக மையத்தில், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 97வது, ஜெயந்தி விழா, நேற்று அதிகாலை 5:15 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனத்துடன் துவங்கியது.காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றத்துக்குப்பிறகு, ஸஹஸ்ரநாமம்
 சத்ய சாய்பாபா ஜெயந்தி விழா; நலத்திட்ட உதவிகள் வினியோகம்



உடுமலை : பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 97வது, ஜெயந்தி விழாவையொட்டி, உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதி சார்பில், பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உடுமலை ஸ்ரீ சத்யசாய் ஆன்மிக மையத்தில், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 97வது, ஜெயந்தி விழா, நேற்று அதிகாலை 5:15 மணிக்கு, ஓம்காரம், சுப்ரபாதம், சங்கீர்த்தனத்துடன் துவங்கியது.

காலை, 7:00 மணிக்கு, கொடியேற்றத்துக்குப்பிறகு, ஸஹஸ்ரநாமம் நடைபெற்றது. மதியம், நாராயண சேவா நிகழ்ச்சி நடந்தது.

மாலை, 5:00 மணிக்கு, வேதபாராயணம், சிறப்பு சாய்பஜன் நடந்தது. மாலை, 6:45 மணிக்கு, மகா மங்கள ஆரத்திக்கு பிறகு, ஸ்வாமியின் அருட்பிரசாதம் பக்தர்களுக்கு வழங்கப்பட்டது.


நலத்திட்ட உதவிகள்



ஸ்ரீ சத்யசாய் சேவா நிறுவனம் சார்பில், பகவான் ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 97வது, ஜெயந்தி விழாவையொட்டி, பல்வேறு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

உடுமலை பஸ் ஸ்டாண்டில், உறங்கிக்கொண்டிருந்த ஆதரவற்ற மக்களுக்கு, போர்வை வழங்கப்பட்டது. மேலும், உடுமலை அரசு மருத்துவமனையில், 21ம் தேதி பிறந்த குழந்தைகளுக்கு, புத்தாடை வழங்கப்பட்டது.

மேலும், மானுப்பட்டி முதியோர் இல்லத்தில், பராமரிக்கப்படும் முதியவர்களுக்கு, தேவையான மளிகைப்பொருட்கள் வழங்கப்பட்டது. இதற்கான ஏற்பாடுகளை, உடுமலை ஸ்ரீ சத்ய சாய் சேவா சமிதியினர் செய்திருந்தினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X