ஊருக்குள் வரும் யானையை விரட்ட வருவீங்களா, மாட்டீங்களா? வனத்துறை மீது விவசாயிகள்  அதிருப்தி

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கெம்பனுார் பகுதியில், ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதே இல்லை என புகார் எழுந்துள்ளது.தொண்டாமுத்துார் அடுத்த கெம்பனுார், வண்டிக்காரன் புதுார், குப்பேபாளையம், தாழியூர், தேவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில், தினமும் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.தவிர, விவசாய

கோவை : கோவை வனச்சரகத்திற்கு உட்பட்ட கெம்பனுார் பகுதியில், ஊருக்குள் வரும் யானைகளை விரட்ட வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு வருவதே இல்லை என புகார் எழுந்துள்ளது.

தொண்டாமுத்துார் அடுத்த கெம்பனுார், வண்டிக்காரன் புதுார், குப்பேபாளையம், தாழியூர், தேவராயபுரம் உள்ளிட்ட பகுதிகளில், தினமும் காட்டு யானைகளின் தொந்தரவு அதிகரித்து வருவதாக பொதுமக்கள் புலம்புகின்றனர்.

தவிர, விவசாய நிலங்களுக்குள் சென்று, பயிர்களையும் நாசம் செய்து விடுகின்றன. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு, காட்டு யானைக்கூட்டம் ஊருக்குள் புகுந்துள்ளது.

வனத்துறைக்கு இது தொடர்பாக தகவல் தெரிவித்தும், சம்பவ இடத்துக்கு வரவில்லை. அலட்சியமாக செயல்படும் வனத்துறையினர் மீது, பொதுமக்கள் கடும் அதிருப்தியடைந்துள்ளனர்.

ஊர் பொதுமக்கள் கூறுகையில், 'கெம்பனுார், போளுவாம்பட்டி வனச்சரகத்தில் இருந்து, சமீபத்தில் கோவை வனச்சரகத்திற்கு மாற்றப்பட்டது.

போளுவாம்பட்டி வனச்சரகத்திற்குள் இருந்தபோது, வன விலங்குகள் ஊருக்குள் வந்த தகவல் தெரிவித்த, அடுத்த நொடியே அதிகாரிகள் சம்பவ இடத்துக்கு வந்து விடுவர். ஆனால், கோவை வனச்சரக அதிகாரிகளுக்கு எத்தனை முறை தகவல் கொடுத்தாலும் வருவதே இல்லை. கேட்டால் வாகனங்கள் இல்லை என்கின்றனர். சுற்றியுள்ள பல விவசாய நிலங்கள், காட்டு யானைகளால் சேதமடைந்துள்ளன. இழப்பீடு தொகை கூட கிடைப்பதில்லை.

வனவிலங்குகளால் மனித உயிர்கள் போனால்தான், வனத்துறை நடவடிக்கை எடுக்குமா' என்று கேள்வி எழுப்புகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X