கால்நடைத்துறைக்கு விவசாயிகள் கோரிக்கை

Added : நவ 23, 2022 | |
Advertisement
உடுமலை : கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படுவதில்லை. எனவே, கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று விவசாயிகள் கூறினர்.விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது:உடுமலையில், 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படுவதில்லை. எப்போதும், பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழைய கட்டடம் எந்த



உடுமலை : கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படுவதில்லை. எனவே, கால்நடைகளுக்கு உரிய நேரத்தில் சிகிச்சை கிடைப்பதில் சிக்கல் ஏற்படுகிறது என்று விவசாயிகள் கூறினர்.

விவசாயிகள் குறைதீர் கூட்டத்தில் அவர்கள் பேசியதாவது:

உடுமலையில், 24 மணி நேரமும் செயல்பட வேண்டிய கால்நடை மருத்துவமனை முறையாக செயல்படுவதில்லை. எப்போதும், பூட்டியே வைக்கப்பட்டுள்ளது. இங்குள்ள பழைய கட்டடம் எந்த விதமான அனுமதியும் இல்லாமல், இடிக்கப்பட்டதோடு, விலை மதிப்பற்ற, பழமையான பொருட்கள் முறைகேடாக விற்கப்பட்டுள்ளது. வாளவாடி கிளை நிலையத்திற்கு டாக்டர்கள் வருவதில்லை.

மாடுகளுக்கு சினை ஊசி செலுத்தும் பணியில், ஏராளமானவர்கள் கிராமங்களில் சுற்றி வருகின்றனர். கால்நடைத்துறை அனுமதி வழங்குகிறதா, கண்காணிக்கிறதா என தெரியவில்லை.

தரமற்ற ஊசிகள் காரணமாக, 5 தடவை வரை, மாடுகளுக்கு சினை ஊசி செலுத்த வேண்டியுள்ளது. ஒரு முறைக்கு, 500 ரூபாய் வரை செலவாகும் நிலையில், விவசாயிகளுக்கு பொருள் இழப்பு ஏற்படுவதோடு, மாடு கன்று ஈனுதல், கறவை தாமதம் மற்றும் மாடுகள் உடல்நலம் பாதிப்பு என வாழ்வாதாரம் கடுமையாக பாதிக்கப்படுகிறது.

கால்நடைத்துறை கிளை நிலையங்கள் முறையாக செயல்படவும், தேவையான சினை ஊசி இருப்பு வைக்கவும், முறைகேடுகளை தடுக்கவும் அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு, விவசாயிகள் பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X