நகை செய்ய கொடுத்த தங்கக்கட்டிகளுடன் நால்வர் மாயம்; தேடுகின்றனர் போலீசார்

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : ஆபரணங்கள் செய்ய கொடுத்த ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளுடன் மாயமான நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள சாமி அய்யா புது வீதியை சேர்ந்தவர் சங்கர், 45. தங்க நகை வியாபாரி. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், இவரது வீட்டின் மாடியில் உள்ள வீட்டுக்கு மேற்குவங்கத்தை சேர்ந்த அனிமேஷ்ஹசரா, 32, என்பவர் தனது, மனைவி சோமாஹசரா, 25, சுரஜித்ஹசரா, 34,

கோவை : ஆபரணங்கள் செய்ய கொடுத்த ரூ.22 லட்சம் மதிப்பிலான தங்கக்கட்டிகளுடன் மாயமான நான்கு பேரை, போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை வெரைட்டிஹால் ரோடு அருகே உள்ள சாமி அய்யா புது வீதியை சேர்ந்தவர் சங்கர், 45. தங்க நகை வியாபாரி. கடந்த நான்கு ஆண்டுகளுக்கு முன், இவரது வீட்டின் மாடியில் உள்ள வீட்டுக்கு மேற்குவங்கத்தை சேர்ந்த அனிமேஷ்ஹசரா, 32, என்பவர் தனது, மனைவி சோமாஹசரா, 25, சுரஜித்ஹசரா, 34, ஸ்டயாஜித்அடாக், 36 ஆகியோருடன் குடி வந்தார்.

வீட்டில் தங்க நகைப்பட்டறை அமைத்து, நகைகளை செய்து கொடுத்து வந்தார்.

கடந்த செப்., மாதம், சங்கர், ரூ.22 லட்சம் மதிப்பிலான, 500 கிராம் தங்கக்கட்டிகளை நகைகளாக செய்து தருமாறு, அனிமேஷ் ஹசராவிடம் கொடுத்தார்.

ஆனால், நகைகள் செய்து தராமல் அனிமேஷ் காலம் தாழ்த்தி வந்தார். அக்., 2ம் தேதி சங்கர் குடும்பத்துடன் வெளியூர் சென்று விட்டு வீடு திரும்பினார்.

அப்போது மாடியில் குடியிருந்த அனிமேஷ் ஹசரா மற்றும் குடும்பத்தினர் மாயமாகியிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அவர்களை தொடர்பு கொள்ள முயற்சித்த போது, மொபைல் போன் சுவிட்ச் ஆப் ஆகி இருப்பது தெரிந்தது.

இதையடுத்து சங்கர், வெரைட்டி ஹால் ரோடு போலீஸ் ஸ்டேஷனில், புகார் அளித்தார். வழக்கு பதிந்த போலீசார் மாயமான நான்கு பேரையும் தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X