காட்டுப்பன்றிகளால் பாதிப்பு: தீர்வு காண வலியுறுத்தல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
உடுமலை : காட்டுப்பன்றிகளால், 40 சதவீதம் சாகுபடி பயிர்கள் பாதித்துள்ளதோடு, விவசாயிகள், பொதுமக்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:மலைப்பகுதியிலிருந்து, 60 கி.மீ., துாரம் வரை உள்ள, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம்

உடுமலை : காட்டுப்பன்றிகளால், 40 சதவீதம் சாகுபடி பயிர்கள் பாதித்துள்ளதோடு, விவசாயிகள், பொதுமக்கள் உயிருக்கும் அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளதால், உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும், என விவசாயிகள் வலியுறுத்தியுள்ளனர்.

உடுமலையில் நடந்த விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:

மலைப்பகுதியிலிருந்து, 60 கி.மீ., துாரம் வரை உள்ள, உடுமலை, குடிமங்கலம், மடத்துக்குளம் ஒன்றிய கிரமங்களில் காட்டுப்பன்றிகள் பரவியுள்ளன.

ஓடைகள், வேலிகள், புதர்களில் பதுங்கி வசித்து வருகின்றன. வனவிலங்கு போல் இல்லாமல், கிராமங்களின் விலங்காக, மாறியுள்ளன. ஒவ்வொரு கிராமங்களிலும், கூட்டம், கூட்டமாக நுாற்றுக்கணக்கான பன்றிகள் என, பல்கி, பெருகியுள்ளன.

கரும்பில், மூன்றாண்டும், வாழையில் இரண்டாண்டும், மக்காச்சோளத்தில் ஒரு ஆண்டும் என, உள்ளேயே பதுங்கிக்கொண்டு பயிர்களை நாசம் செய்து வருகின்றன.

மலையடிவாரத்திலுள்ள கிராமங்களில், காட்டுப்பன்றிகளால் விவசாயத்தை கைவிடும் சூழல் ஏற்பட்டுள்ளது. தற்போது, மக்காச்சோளம், தென்னை, காய்கறி என அனைத்து பயிர்களையும் நாசம் செய்து வருகின்றன.

தற்போது, பயிர்களை மட்டுமின்றி ஆடு, மாடு என கால்நடைகளையும், பொதுமக்களையும் தாக்கி வருகின்றன. விவசாயிகள் ஒருங்கிணைந்து போராட்டம் நடத்திய போது, விரைவில் தீர்வு காணப்படும், வன விலங்குகள் பட்டியலிருந்து நீக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்தனர்.

ஆனால், தற்போது காட்டுபன்றி சேதம் குறித்து வனத்துறையினருக்கு தகவல் கொடுத்தாலும், அவர்கள் கண்டு கொள்வதில்லை. காய்கறி பயிர்கள் மட்டுமன்றி, மலையடிவார கிராமங்களில், தட்டை, பாசி பயிறு, கொள்ளு, மொச்சை என சிறு தானிய பயிர்களும் சாகுபடி செய்யப்பட்டு வருகிறது.

தற்போது, காட்டுபன்றிகளால், அந்த விவசாயிகள் சாகுபடி செய்யாமல், விளை நிலங்கள் வீணாக உள்ளது.

இவ்வாறு, காட்டுப்பன்றிகளால்,உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், 40 சதவீதம் வரையிலான விவசாய பயிர்கள் சேதமடைந்துள்ளன.

பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பயிர்கள் சேதமடைவதோடு, விவசாயிகள் உயிருக்கு அச்சுறுத்தல் ஏற்பட்டுள்ளது. இப்பிரச்னைக்கு தீர்வு காண வேண்டும்.

கல்லாபுரம், மதகடி புதுார் பகுதிகளில், தென்னை, மா உள்ளிட்ட பயிர்கள் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. வேறு பகுதியில் பிடித்த குரங்குகளை, வனப்பகுதிக்குள் விடுவதற்கு பதில், அணையை ஒட்டிய விவசாய நிலப்பகுதியில் விடுவித்துள்ளனர்.

தற்போது, அவை இனப்பெருக்கம் செய்து, கூட்டம், கூட்டமாக விவசாய நிலங்களை துவம்சம் செய்து வருகின்றன. 50 ஏக்கர் சுற்றவில், காணப்படும் இக்குரங்குகளை பாதுகாப்பாக பிடித்து, வனப்பகுதியில் விட வேண்டும்.


சந்தை வேண்டும்



உடுமலை, மடத்துக்குளம் தாலுகாவில், காய்கறி பயிர் சாகுபடி பிரதானமாக உள்ளது. விளை பொருட்களை, விவசாயிகள் உடுமலை நகராட்சி சந்தைக்கு கொண்டு வந்து விற்று வருகின்றனர்.

முழு மகசூல் கிடைக்கும் வகையில், காய்கள் நன்கு திரண்டிருந்தால், கமிஷன் மண்டி உரிமையாளர்கள் ஏற்றுக்கொள்வதில்லை. குறைந்த விலைக்கு ஏலம் கூறுகின்றனர்.

50 முதல், 75 சதவீதம் வரை மட்டுமே, வளர்ந்த காய்கறிகளை கொண்டு வருமாறு விவசாயிகளை வலியுறுத்துகின்றனர்.

இதனால், விவசாயிகளுக்கு மகசூல் வருவாய் இழப்பு ஏற்படுவதோடு, பொதுமக்களுக்கும் தரமற்ற காய்கறிகள் கிடைக்கிறது.

அதே போல், கமிஷன் கடைகளில், முறையாக ஏலம் கூறாமல், 10 சதவீதம் கமிஷன் எடுத்துக்கொண்டு, அதிகளவு முறைகேடு நடக்கிறது.

எனவே, உடுமலை ஒழுங்கு முறை விற்பனைக்கூட வளாகத்தில், விளை பொருட்களை விற்பனை செய்யும் வகையில் சந்தை வசதி செய்து தர வேண்டும். இங்கு, குளிர்பதன கிடங்கு வசதியும் இருப்பதால், விற்காத காய்கறிகளை இருப்பு வைக்க முடியும்.


கூட்டுறவு சங்க கடன்



கூட்டுறவு சங்கங்களில், விவசாயிகளுக்கு பயிர்க்கடன் வழங்குவதில் தொடர்ந்து குழப்பம் நீடித்து வருகின்றது. சம்பந்தப்பட்ட வங்கிக்கு செல்ல வேண்டும், தடையின்மை சான்று என அலைகழிக்கப்பட்டு வருகின்றனர்.

ஒரே தேசம், ஒரே கார்டு என ஆதார் கார்டு வழங்கப்பட்டு, நடைமுறையில் உள்ளது. ஆதார் கார்டு அடிப்படையில் கடன் வழங்கப்படுகிறது.

முறைகேடுகள் நடக்க வாய்ப்பில்லாத நிலையில், அதிகாரிகள் வேண்டும், என்றே இழுத்தடித்து வருகின்றனர்.

இவ்வாறு, பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X