பெண்ணை தாக்கி 5 சவரன் நகை பறிப்பு 

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : பெண்ணை தாக்கி, 5 சவரன் நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர். கோவை சிங்காநல்லுார் திருகுமரன் நகரை சேர்ந்தவர், செல்வி 50; கூலித்தொழிலாளி. தனது இரு மகள்களுடன் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு செல்வதற்காக வீட்டின் வெளியே வந்தார். அப்போது அங்கு இரு நபர்கள் நின்றிருந்தனர்.அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த செல்வி,



கோவை : பெண்ணை தாக்கி, 5 சவரன் நகையை பறித்து சென்ற நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.

கோவை சிங்காநல்லுார் திருகுமரன் நகரை சேர்ந்தவர், செல்வி 50; கூலித்தொழிலாளி. தனது இரு மகள்களுடன் மூன்றாவது மாடியில் வசித்து வருகிறார். நேற்று முன்தினம் பணிக்கு செல்வதற்காக வீட்டின் வெளியே வந்தார். அப்போது அங்கு இரு நபர்கள் நின்றிருந்தனர்.

அவர்களின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த செல்வி, எதற்காக அங்கு நிற்பதாக கேள்வி எழுப்பினார். அப்போது அவர்கள் தண்ணீர் தொட்டியை பழுதுபார்க்க வந்திருப்பதாக தெரிவித்தனர். இதையடுத்து, செல்வி கதவை பூட்டி விட்டு வேலைக்கு செல்ல முயன்றார். அப்போது அந்த நபர்கள், செல்வியை தாக்கி, கழுத்தில் இருந்த 5 சவரன் தங்க செயினை பறித்துக் கொண்டு தப்பினர்.

செல்வி சிங்காநல்லுார் போலீசாரிடம் புகார் தெரிவித்தார். வழக்கு பதிந்த போலீசார், மர்மநபர்களை தேடி வருகின்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X