கிராமங்களில் அதிகரிக்கும் திருட்டு; போலீசார் அலட்சியம்

Added : நவ 23, 2022 | |
Advertisement
உடுமலை : உடுமலை பகுதிகளில், கிணறுகளில் மின் மோட்டார், கேபிள் மற்றும் கால்நடைகள் திருட்டு அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் புகார் மனுவை கூட பெறாமல், போலீசார் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், தோட்டத்து சாளைகள், விவசாய நிலங்களில் தொடர் திருட்டு நடந்து



உடுமலை : உடுமலை பகுதிகளில், கிணறுகளில் மின் மோட்டார், கேபிள் மற்றும் கால்நடைகள் திருட்டு அதிகரித்துள்ள நிலையில், விவசாயிகள் புகார் மனுவை கூட பெறாமல், போலீசார் அலட்சியம் காட்டுவதாக விவசாயிகள் வேதனை தெரிவித்தனர்.

விவசாயிகள் குறை தீர்க்கும் கூட்டத்தில், விவசாயிகள் பேசியதாவது:

உடுமலை, மடத்துக்குளம் பகுதிகளில், தோட்டத்து சாளைகள், விவசாய நிலங்களில் தொடர் திருட்டு நடந்து வருகிறது. உடுமலை சுற்றுப்பகுதிகளிலுள்ள 30க்கும் மேற்பட்ட கிராமங்களில், கிணறுகளிலுள்ள மின் மோட்டார்கள், வயர்கள், கேபிள்கள் தொடர்ந்து திருடப்பட்டு வருகிறது.

இரவு நேரங்கள் மட்டுமின்றி, பகல் நேரங்களிலும் இது போன்ற திருட்டுகள் அதிகரித்துள்ளது. இதனால், ஏராளமான விவசாயிகளின், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான பொருட்களை இழந்துள்ளதோடு, தொடர்ந்து பயிர்களுக்கு நீர் பாய்ச்ச முடியாமல், பாதித்து வருகின்றனர். இதுகுறித்து போலீசில் புகார் கொடுத்தும், நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

குடிமங்கலம் ஒன்றியம், வசவநாயக்கன்பட்டி, வேலாயுதம்பாளையம் உள்ளிட்ட சுற்றுப்புற கிராமங்களில், ஆடு, மாடுகள் தொடர்ந்து திருடு போய் வருகிறது.

கிராமங்களிலுள்ள விவசாயிகள் ஒருங்கிணைந்து, கிராம எல்லைகளில் சோதனைச்சாவடி அமைத்து, திருடர்களை துரத்திப்பிடிக்க முயற்சித்த நிலையில், ஆடு, மாடுகளை கழுத்தை அறுத்து, காற்றாலை நிலங்களில் வீசி விட்டு சென்று விட்டனர்.

இவ்வாறு, 28 விவசாயிகளின், பல லட்சம் ரூபாய் மதிப்பிலான, ஆடு, மாடு திருடப்பட்ட நிலையில், குடிமங்கலம் போலீசில் புகார் கொடுத்தும், மனு ஏற்பு ரசீது கூட கொடுக்காமல், அலைகழித்து வருகின்றனர்.

இதனால், திருடர்களுக்கு உடந்தையாக போலீசாரே உள்ளதாக, சந்தேகம் எழுகிறது. திருடர்களை பிடிக்க, கிராம மக்கள் முயற்சித்து வரும் நிலையில், போலீசார் கண்காணிப்பு பணியில் கூட ஈடுபடுவதில்லை.

எனவே, போலீசார் விவசாய கிணறுகளில், மின் மோட்டார், கேபிள்கள் திருட்டு மற்றும் கால்நடை திருட்டை தடுக்கும் வகையில், ரோந்து பணியை தீவிரப்படுத்தவும், விவசாயிகள் புகார்களை பெற்று, வழக்குப்பதிவு செய்யவும் வேண்டும்.

இவ்வாறு, பேசினர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X