3ம் டிவிஷன் கிரிக்கெட் லீக்; சச்சின் கிரிக்கெட் கிளப் வெற்றி 

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என் தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் கோப்பைக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், சச்சின் கிரிக்கெட் கிளப் மற்றும் மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.போட்டியில் முதலில் பேட் செய்த சச்சின் அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 158 ரன்கள் எடுத்தது.



கோவை : கோவை மாவட்ட கிரிக்கெட் சங்கம் சார்பில், 'என் தாமோதரன் வெல்பேர் டிரஸ்ட் கோப்பைக்கான' மூன்றாம் டிவிஷன் கிரிக்கெட் லீக் போட்டி பி.எஸ்.ஜி., மருத்துவ கல்லுாரி மைதானத்தில் நடந்தது. இதில், சச்சின் கிரிக்கெட் கிளப் மற்றும் மிராக்கிள் கிரிக்கெட் கிளப் அணிகள் மோதின.

போட்டியில் முதலில் பேட் செய்த சச்சின் அணி, 50 ஓவர்களில் ஒன்பது விக்கெட் இழப்புக்கு, 158 ரன்கள் எடுத்தது. அணியின் மனோஜ் வில்சன் 41 ரன்கள் சேர்த்தார். மிராக்கிள் அணியின் ரஞ்சித் நான்கு விக்கெட் வீழ்த்தினார். அடுத்து களமிறங்கிய மிராக்கிள் அணியின் கார்த்திக் (44), வினோத் குமார், (32) எடுக்க, அணி 49 ஓவர்களில் 146 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. சச்சின் அணியின் சிவஅழகு நாச்சியப்பன், சிறப்பாக பந்து வீசி ஐந்து விக்கெட்கள் வீழ்த்தி அணியின் வெற்றிக்கு உதவினார். தினேஷ் மூன்று விக்கெட் சாய்த்தார். இதன் மூலம் 12 ரன்கள் வித்தியாசத்தில் சச்சின் சி.சி., வெற்றி பெற்றது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X