'ஆய்வக வசதி மேம்படுத்த 50 கோடி ரூபாய் ஒதுக்கீடு; ' தொழில்நுட்ப இயக்குனரக கமிஷனர் தகவல்

Added : நவ 23, 2022 | |
Advertisement
கோவை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு, 14 நாட்கள் ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் துவக்க விழா மற்றும் விர்ச்சுவல் ஸ்டுடியோ திறப்பு விழா, நேற்று கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் துவங்கியது. இதில், தொழில்நுட்ப இயக்குனரக கமிஷனர் லட்சுமிபிரியா பேசுகையில், ''பாலிடெக்னிக் கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் பெரும்பாலும்,

கோவை : அரசு பாலிடெக்னிக் கல்லுாரிகளில், புதிதாக பணியில் சேர்ந்துள்ள ஆசிரியர்களுக்கு, 14 நாட்கள் ஒருங்கிணைந்த பயிற்சி முகாம் துவக்க விழா மற்றும் விர்ச்சுவல் ஸ்டுடியோ திறப்பு விழா, நேற்று கோவை அரசு தொழில்நுட்ப கல்லுாரியில் துவங்கியது.

இதில், தொழில்நுட்ப இயக்குனரக கமிஷனர் லட்சுமிபிரியா பேசுகையில், ''பாலிடெக்னிக் கல்லுாரிக்கு வரும் மாணவர்கள் பெரும்பாலும், பின்தங்கிய குடும்பங்களை சேர்ந்தவர்கள். அவர்களின் எதிர்காலம் உங்களிடம் தான் உள்ளது. இப்பொறுப்பை உணர்ந்து செயல்படவேண்டியது அவசியம்.

பொறியியல் கல்லுாரிகளில், அயல் மொழிக்கான ஆய்வகங்கள் அமைக்க 25 கோடி ரூபாய், பாலிடெக்னிக் கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த, 25 கோடி ரூபாய் என, 50 கோடி ரூபாய்க்கான ஒப்பந்தம் விடப்பட்டுள்ளது. ஒருங்கிணைந்த இப்பயிற்சி முகாமை, முழுமையாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்,'' என்றார்.

இந்நிகழ்ச்சியை தொடர்ந்து, ஜி.சி.டி.,யில் நடந்துவரும் கட்டுமான பணிகளை ஆய்வு செய்தார். பாலிடெக்னிக் கூடுதல் இயக்குனர் ஜெயந்தி, கல்லுாரி முதல்வர் தாமரை, ஒருங்கிணைப்பாளர் புருஷோத்தமன் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X