தியாகிகள் விபரங்கள் சேகரிப்பு; அரசுக்கு சமர்ப்பிக்க ஏற்பாடு

Added : நவ 23, 2022 | |
Advertisement
குன்னுார் : குன்னுார் கொலக்கம்பை அருகே, மானார் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளி ஆசிரியை வனஜா, மத்திய அரசின் கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மைய (சி.சி.ஆர்.டி.,) மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.கடந்த மாதம் டில்லியில் நடந்த, 75 வது சுதந்திர தின சிறப்பு பயிற்சியில், 25 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற, 95 பேரில் இவரும் ஒருவர்.தற்போது, நாட்டின் சுதந்திர போராட்டத்தில்



குன்னுார் : குன்னுார் கொலக்கம்பை அருகே, மானார் பஞ்சாயத்து ஆரம்ப பள்ளி ஆசிரியை வனஜா, மத்திய அரசின் கலாசார வளங்கள் மற்றும் பயிற்சி மைய (சி.சி.ஆர்.டி.,) மாவட்ட ஒருங்கிணைப்பாளராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.

கடந்த மாதம் டில்லியில் நடந்த, 75 வது சுதந்திர தின சிறப்பு பயிற்சியில், 25 மாநிலங்களில் இருந்து பங்கேற்ற, 95 பேரில் இவரும் ஒருவர்.

தற்போது, நாட்டின் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்ற, நீலகிரி தியாகிகள் விபரம் குறித்து சேகரித்து, மத்திய அரசுக்கு அறிக்கை சமர்பிக்க உள்ளார்.

இதன் ஒரு பகுதியாக, அருவங்காடு ஜெகதளா பகுதியில், சுதந்திர போராட்ட தியாகி மறைந்த கங்காதரன் குடும்பத்தினரை சந்தித்து விபரங்கள் சேகரித்தார்.

ஆசிரியை வனஜா கூறுகையில்,''குன்னுார், கூடலுார், ஊட்டி உட்பட சுற்றுப்புற கிராமங்களில் விடுமுறை தினங்களில் நேரில் சென்று, தியாகிகள் குறித்த விபரங்கள் சேகரித்து வருகிறேன். இந்த விபரங்களை மத்திய அரசுக்கு சமர்ப்பித்து, கலாசார அமைச்சகம் இதனை தொகுத்து வெளியிட உள்ளது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X