துணை ஆதார குழாய் பணி; குடிநீர் வினியோகம் சீராகும்

Added : நவ 23, 2022 | |
Advertisement
ஊட்டி : ஊட்டி அருகே காந்தள் பகுதியில், 1.5 கி.மீ., துாரத்துக்கு சாலை மற்றும் குடிநீர் வினியோக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.ஊட்டி நகராட்சிக்கு உட்பட காந்தள் பகுதி,7 வார்டுகளை உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு, 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கான, 1.5 கி.மீ., சாலை சீரமைப்பு பணி, 1.3 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்டுள்ளது.அதற்கு முன்பாக, சாலையில் உள்ள பாதாள சாக்கடை தொட்டி



ஊட்டி : ஊட்டி அருகே காந்தள் பகுதியில், 1.5 கி.மீ., துாரத்துக்கு சாலை மற்றும் குடிநீர் வினியோக சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.

ஊட்டி நகராட்சிக்கு உட்பட காந்தள் பகுதி,7 வார்டுகளை உள்ளடக்கியதாக உள்ளது. இங்கு, 30 ஆயிரம் குடியிருப்புகள் உள்ளன. இப்பகுதிக்கான, 1.5 கி.மீ., சாலை சீரமைப்பு பணி, 1.3 கோடி ரூபாய் மதிப்பில் துவக்கப்பட்டுள்ளது.

அதற்கு முன்பாக, சாலையில் உள்ள பாதாள சாக்கடை தொட்டி இணைப்பு; குடிநீர் பிரச்னையை தீர்க்க, நான்கு வார்டுகளில், 'சப்--மெயின்' எனப்படும், துணை ஆதார குழாய் அமைக்கும் பணிகள் கடந்த ஒரு மாதமாக நடந்து வருகிறது. இப்பணிகள் நிறைவு பெற்றவுடன், ரோகிணி சந்திப்பு முதல்; முக்கோணம் வரை சாலை சீரமைக்கும் பணி நடக்கிறது.

நகராட்சி கமிஷனர் காந்திராஜ் கூறுகையில்,''காந்தள் பகுதியில் சாலையை முழுமையாக சீரமைக்கும் முன்பு, குழாய்கள் சீரமைப்பு பணி, பாதாள சாக்கடை சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது. சில நாட்களில் சாலை சீரமைப்பு முழுமை பெறும். அதற்பின், சாலையை தோண்டும் பணி நகராட்சியின் அனுமதியின்றி அங்கு மேற்கொள்ள கூடாது,'' என்றார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X