காட்டு யானைகள் உலா: வனத்துறையினர் எச்சரிக்கை

Added : நவ 23, 2022 | |
Advertisement
வால்பாறை : வால்பாறை அருகே, ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முயன்ற வனத்துறையினரை, யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா டான்டீ தேயிலை தோட்டம். இந்த எஸ்டேட்டில், சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.இந்நிலையில், சின்கோனா முதல் பிரிவு எஸ்டேட் பகுதிக்கு நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள், அங்குள்ள
 காட்டு யானைகள் உலா: வனத்துறையினர் எச்சரிக்கை

வால்பாறை : வால்பாறை அருகே, ரேஷன் கடையை சேதப்படுத்திய யானைகளை விரட்ட முயன்ற வனத்துறையினரை, யானைகள் விரட்டியதால் பரபரப்பு ஏற்பட்டது.

வால்பாறை அடுத்துள்ளது சின்கோனா டான்டீ தேயிலை தோட்டம். இந்த எஸ்டேட்டில், சமீப காலமாக வனவிலங்குகள் நடமாட்டம் அதிக அளவில் உள்ளது.

இந்நிலையில், சின்கோனா முதல் பிரிவு எஸ்டேட் பகுதிக்கு நேற்று அதிகாலை, 3:00 மணிக்கு கூட்டமாக வந்த யானைகள், அங்குள்ள சிந்தாமணி ரேஷன் கடையின் கதவை உடைத்து அரிசி மூட்டையை வெளியே இழுத்து சேதப்படுத்தின.

தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு சென்ற வனத்துறையினர், யானைகளை விரட்டும் பணியில் ஈடுபட்டனர். ஆனால், யானைகள் வனத்துறையினரை விரட்டத்துவங்கியதால், அவர்கள் அலறியடித்து ஓட்டம் பிடித்தனர். அதன்பின் அதிகாலை, 5:00 மணிக்கு யானைகள் அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றதால், வனத்துறையினரும், தொழிலாளர்களும் நிம்மதியடைந்தனர்.

* பொள்ளாச்சி அடுத்துள்ள ஆழியாறு வண்ணத்துப்பூச்சி பூங்கா மற்றும் சுற்றுப்பகுதியில், இரவு நேரங்களில் ஒற்றை யானை உலா வருகிறது.

இதனால், வால்பாறை ரோட்டில் செல்லும் சுற்றுலா பயணியர், பொதுமக்கள் பாதுகாப்பாக செல்ல வேண்டும். யானையை கண்டால், வாகனங்களை நிறுத்தி போட்டோ எடுப்பதை தவிர்க்க வேண்டும், என, வனத்துறையினர் எச்சரித்துள்ளனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X