ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா உலகம் சுபிட்சம் பெற சிறப்பு பிரார்த்தனை

Added : நவ 23, 2022 | |
Advertisement
குன்னுார் : குன்னுார் எல்லநள்ளி சாய் கைலாஷில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 97வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.ஸ்ரீ சத்யசாய் பாபாவின், 97வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார்--ஊட்டி சாலை எல்லநள்ளி அருகே அமைந்துள்ள சாய் கைலாஷில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 'தத்தெடுக்கப்பட்ட கிராம கோவில்கள்,
 ஸ்ரீ சத்ய சாய்பாபா பிறந்த நாள் விழா  உலகம் சுபிட்சம் பெற சிறப்பு பிரார்த்தனை

குன்னுார் : குன்னுார் எல்லநள்ளி சாய் கைலாஷில், ஸ்ரீ சத்ய சாய்பாபாவின், 97வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது.

ஸ்ரீ சத்யசாய் பாபாவின், 97வது பிறந்த நாள் விழா உலகம் முழுவதும் நேற்று கொண்டாடப்பட்டது. இதன் ஒரு பகுதியாக, குன்னுார்--ஊட்டி சாலை எல்லநள்ளி அருகே அமைந்துள்ள சாய் கைலாஷில், கடந்த ஒரு வாரமாக பல்வேறு நிகழ்ச்சிகள் நடத்தப்பட்டன. 'தத்தெடுக்கப்பட்ட கிராம கோவில்கள், சமுதாய கூடங்கள், குடிநீர் தொட்டிகள்,' என, கிராம சேவை துாய்மை பணி நடந்தது. பல்வேறு பகுதிகளில், 97 தொடர் பஜனைகள் நடத்தப்பட்டன.

ஸ்ரீ சத்யசாய் பாபாவின் பிறந்த நாளான நேற்று அதிகாலை, 5:00 மணிக்கு, 'ஒம்காரம், சுப்ரபாதம், அஷ்டோத்திரம், வேதம் ஓதுதல், தபோவன பாராயணம்,' என, சிறப்பு பிரார்த்தனையுடன் விழா நடந்தது. உலகம் முழுவதும் சுபிட்சம் பெறவும் சிறப்பு பிரார்த்தனை நடந்தது.

கோத்தகிரி தத்வன சைதன்ய சுவாமி குழுவினர் தெய்வீக பாடல்கள், பஜனை பாடி பக்தர்களை பரவசப்படுத்தினர். சத்ய சாய் நிறுவனத்தின் மாவட்ட பஜனை குழுவினரின் இசை நிகழ்ச்சி நடந்தது. 35 சேவாதள தொண்டர்களுக்கு வஸ்திரதானம் வழங்கப்பட்டது. 750 பக்தர்கள் பங்கேற்றனர். அன்னபிரசாதம் வழங்கப்பட்டது.

கோவிலில் உள்ள காயத்திரி மாதாவுக்கு சிறப்பு அலங்காரம்; காயத்திரிமந்திரம் பாராயணம்நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X