துரத்திய மக்னா யானை: வனக்காப்பாளர் கால் முறிவு

Added : நவ 23, 2022 | |
Advertisement
பந்தலுார் : பந்தலுார் அருகே மக்னா யானை துரத்திய போது கீழே விழுந்த வனக்காப்பாளர் கால் முறிந்தது.பந்தலுார் அருகே தேவாலா, காட்டி மட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, மக்னா யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு வழங்கி உள்ளது. வன குழுவினர் கடந்த மூன்று நாட்களாக யானையின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை காட்டி மட்டம் வனப்பகுதியில் புதர் மறைவிலிருந்து
Magna elephant, Forests Conservator , Pandalur, மக்னா யானை, வனக்காப்பாளர்,  பந்தலுார் , வனத்துறை, Magna Yanai,   Forest Department,



பந்தலுார் : பந்தலுார் அருகே மக்னா யானை துரத்திய போது கீழே விழுந்த வனக்காப்பாளர் கால் முறிந்தது.

பந்தலுார் அருகே தேவாலா, காட்டி மட்டம் வனப்பகுதியில் முகாமிட்டிருந்த, மக்னா யானையை பிடிக்க வனத்துறை உத்தரவு வழங்கி உள்ளது. வன குழுவினர் கடந்த மூன்று நாட்களாக யானையின் நடவடிக்கைகளை கண்காணித்து வருகின்றனர். நேற்று காலை காட்டி மட்டம் வனப்பகுதியில் புதர் மறைவிலிருந்து வெளியே வந்த யானை, அங்கிருந்த வனக் குழுவினரை துரத்தியுள்ளது. வனக்குழுவினர் ஓடி உள்ளனர். அப்போது கால் இடறி விழுந்ததில், வனக்காப்பாளர் காளன்,46, என்பவரின் கணுக்காலில் முறிவு ஏற்பட்டது. குழுவினர் சப்தம் எழுப்பி, யானையை விரட்டினர்.

பின், 108 ஆம்புலன்ஸ் மூலம், கூடலுார் அரசு மருத்துவமனைக்கு காளன் கொண்டு செல்லப்பட்டு அங்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. தொடர்ந்து மேல் சிகிச்சைக்காக கோவை மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

வனத்துறை அதிகாரிகள் கூறுகையில்,' பந்தலுார் மக்னா-2 யானை ஆட்களை தாக்கி வருவதால், மிகவும் முன்னெச்சரிக்கையுடன் அதனை பிடிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement




வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X