கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை

Added : நவ 23, 2022 | |
Advertisement
கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. அம்மனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த பக்தர்களும், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.சூலக்கல் மாரியம்மன் கோவிலில்,
 கோவில்களில் அமாவாசை சிறப்பு பூஜை


கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, பொள்ளாச்சி, உடுமலை சுற்றுப்பகுதி கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன.

ஆனைமலை மாசாணியம்மன் கோவிலில், கார்த்திகை மாத அமாவாசையை முன்னிட்டு, சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன.

அம்மனை தரிசிக்க உள்ளூர் மட்டுமின்றி வெளியூரைச் சேர்ந்த பக்தர்களும், நீண்ட வரிசையில் காத்திருந்து வழிபட்டனர்.

சூலக்கல் மாரியம்மன் கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. தொடர்ந்து, அம்மன் சிறப்பு அலங்காரத்தில், பக்தர்களுக்கு அருள்பாலித்தார். டி.கோட்டாம்பட்டி ஸ்ரீதேவி, பூதேவி சமேத வரதராஜப்பெருமாள் கோவிலில், பக்த ஆஞ்சநேயருக்கு அபிேஷகம் மற்றும் சிறப்பு பூஜைகள் நடைபெற்றன. சிறப்பு அலங்காரத்தில் ஆஞ்சநேயர், பக்தர்களுக்கு அருள்பாலித்தார்.

ஜோதிநகர் விசாலாட்சி உடனமர் ஜோதிலிங்கேஸ்வரர் கோவிலில் நேற்று காலை, 10:00 மணிக்கு சிறப்பு அபிேஷகம், அலங்கார பூஜைகள் நடைபெற்றன. பக்தர்கள் சுவாமி தரிசனம் செய்தனர்.

அம்பராம்பாளையம் ஆற்றில் அமாவாசையை முன்னிட்டு, முன்னோர்களுக்கு திதி கொடுத்து மக்கள் வழிபாடு செய்தனர்.

* வால்பாறை சுப்ரமணிய சுவாமி கோவிலில், சிறப்பு அபிேஷகம், அலங்கார வழிபாடு நடந்தது. நடுமலை துண்டுக்கருப்பராயர் சுவாமி கோவிலில், நேற்று காலை சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டன. தொடர்ந்து பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

சோலையார் முனீஸ்வரன் கோவிலில், மதியம், 12:00 மணிக்கு கெடா வெட்டி, அன்னதானம் வழங்கப்பட்டது.

* உடுமலை அருகே, சின்னபொம்மன்சாளையில், மாரியம்மன் கோவிலில், கார்த்திகை அமாவாசையை முன்னிட்டு, மாரியம்மனுக்கு வெள்ளிக்காப்பு அலங்காரத்தில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

திருமூர்த்திமலை அமணலிங்கலிங்கேஸ்வரர் கோவில், உட்பட பல்வேறு கோவில்களில் சிறப்பு பூஜைகள் நடந்தன.

- நிருபர் குழு -

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X