போலீஸ் செய்திகள்

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருட்டு வழக்கு; 5 பேரிடம் விசாரணைபொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க தனிப்படை போலீசார், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிய பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துாத்துக்குடியைச் சேர்ந்த மணி, ஸ்ரீராமன், திருநெல்வேலியை




திருட்டு வழக்கு; 5 பேரிடம் விசாரணை



பொள்ளாச்சி மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், நகை பறிப்பு உள்ளிட்ட பல்வேறு சம்பவங்கள் நடைபெற்று வருகின்றன. இதைத் தடுக்க தனிப்படை போலீசார், குற்ற சம்பவங்களில் ஈடுபட்டவர்களை கண்டறிய பல்வேறு மாவட்டங்களில் தேடுதல் பணியில் ஈடுபட்டனர்.

அதில், திருட்டு சம்பவத்தில் ஈடுபட்ட துாத்துக்குடியைச் சேர்ந்த மணி, ஸ்ரீராமன், திருநெல்வேலியை சேர்ந்த அந்தோணி, தென்காசியை சேர்ந்த மணிகண்டன், தர்மதுரை ஆகியோரை பிடித்து போலீசார் விசாரிக்கின்றனர்.


சேவல் சண்டை; 9 பேர் கைது



பொள்ளாச்சி, ஜே.ஜே., நகர் பகுதியில் சேவல் சண்டை நடப்பதாக, தனிப்பிரிவு போலீசாருக்கு தகவல் கிடைத்தது. தனிப்பிரிவு, கிழக்கு போலீசார் அங்கு சென்று, சேவல் சண்டையில் ஈடுபட்டவர்களை பிடித்தனர்.

பொள்ளாச்சி ராஜாமில் ரோட்டை சேர்ந்த கதிர் சர்வேஷ், 25, ரங்கசமுத்திரம் நந்தகுமார், 27, பொள்ளாச்சி ஜோதிநகர் சேதுராமன், 28, முகமது சலீம், 46, சிவசெல்வம், 26, அய்யம்பாளையம் ராமசாமி, 42, சூளேஸ்வரன்பட்டி ராமகிருஷ்ணன், 26, சூர்யா, 18, பாலசந்திரன், 20, ஆகிய ஒன்பது பேரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து, 15 சேவல், 12,900 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X