வன விலங்கு கணக்கெடுப்பு; 150 வன ஊழியர்கள் பங்கேற்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
கூடலுார் : முதுமலை வெளி வட்ட வனப்பகுதியில் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 150 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வெளிவட்டம் பகுதிக்கு உட்பட்ட சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகங்களில், வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இதற்காக, வனப்பகுதி, 34 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. வனச்சரகர்கள் பாலாஜி, முரளி,
 வன விலங்கு கணக்கெடுப்பு; 150 வன ஊழியர்கள் பங்கேற்பு



கூடலுார் : முதுமலை வெளி வட்ட வனப்பகுதியில் நடந்த வனவிலங்கு கணக்கெடுப்பு பணியில், 150 வன ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர்.

முதுமலை புலிகள் காப்பகத்தில் மசினகுடி வெளிவட்டம் பகுதிக்கு உட்பட்ட சீகூர், சிங்காரா, நீலகிரி கிழக்கு சரிவு வனச்சரகங்களில், வன விலங்குகள் கணக்கெடுப்பு பணி நேற்று துவங்கியது. இதற்காக, வனப்பகுதி, 34 பிரிவுகளாக பிரிக்கப்பட்டது. வனச்சரகர்கள் பாலாஜி, முரளி, ஜான்பீட்டர், மணி வெங்கடேஷ் தலைமையில், 150 வன ஊரியர்கள் இப்பணியில் ஈடுப்பட்டுள்ளனர். வன விலங்குகள் கணக்கெடுப்பு குறித்த விபரங்களை 'மொபைல் ஆப்' டேட்டா சீட்டுகளில் பதிவு செய்து வருகின்றனர்.

பாதுகாப்புக்காக கைகளில் எடுத்து செல்லும் பந்தத்தை ஆபத்தான நேரத்தில், மட்டும் பயன்படுத்த வன ஊழியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வனத்துறையினர் கூறுகையில்,'கணக்கெடுப்பு பணி, 27ம் தேதி வரை நடக்கும். பதிவு செய்யப்படும் விபரங்களை ஆய்வு செய்து, அதன் அடிப்படையில் வன விலங்குஎண்ணிகை கணக்கிடப்படும்,' என்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X