புகார் பெட்டி: திருவள்ளூர்

Added : நவ 23, 2022 | |
Advertisement
துருபிடித்து உடைந்த 'கைபம்ப்'திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சி, மருதவல்லிபுரம் கிராமத்தில் சுடுகாடு அருகே அரிசந்திரன் கோவில் அருகே அமைக்கப்பட்ட கைபம்ப் பழுதடைந்து உள்ளது.மூன்று ஆண்டுகளாக பயன்பாடின்றி போனதால் தற்போது சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு துரும்பு பிடித்து காணப்படுகிறது. இதனால் சுடுகாடில் நீர் வசதியின்றி சடலத்தை அடக்கம் செய்ய
 புகார் பெட்டி: திருவள்ளூர்


துருபிடித்து உடைந்த 'கைபம்ப்'



திருவாலங்காடு ஒன்றியம், தொழுதாவூர் ஊராட்சி, மருதவல்லிபுரம் கிராமத்தில் சுடுகாடு அருகே அரிசந்திரன் கோவில் அருகே அமைக்கப்பட்ட கைபம்ப் பழுதடைந்து உள்ளது.

மூன்று ஆண்டுகளாக பயன்பாடின்றி போனதால் தற்போது சமூக விரோதிகளால் உடைக்கப்பட்டு துரும்பு பிடித்து காணப்படுகிறது. இதனால் சுடுகாடில் நீர் வசதியின்றி சடலத்தை அடக்கம் செய்ய வருவோர் சிரமப்படுகின்றனர்.

இந்நிலையில் பழுதடைந்த கைபம்பை சீரமைக்க ஒன்றிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எல்.சிவராமன், மருதவல்லிபுரம்.


கால்வாயில் நிற்கும் கழிவு நீர்



திருத்தணி நகராட்சி, காந்தி ரோடு மெயின் சாலையில் 300க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இந்த வீடுகளில் இருந்து வெளியேறும் கழிவு நீர் செல்வதற்கு நகராட்சி நிர்வாகம் சார்பில், கால்வாய் அமைக்கப்பட்டது.

கால்வாயை நகராட்சி நிர்வாகம் முறையாக பராமரிக்காததால், கழிவு நீர் தேங்கி நிற்கிறது.

மழை பெய்யும் போது, மழை நீருடன் கழிவு நீரும் கலந்து அங்குள்ள குடியிருப்புகளில் புகுந்து விடுகிறது. மேலும் கழிவு நீர் தேங்கி நிற்பதால் கொசுக்கள் அதிகளவில் உற்பத்தியாகி மக்களை கடிப்பதால் நோய் பரவும் அபாயம் உள்ளது. எனவே நகராட்சி ஆணையர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- -அ.முனுசாமி, திருத்தணி.


சுற்றுச்சுவர் இல்லாத பள்ளி



திருவாலங்காடு ஒன்றியம், சின்னம்மாபேட்டை ஊராட்சியில், அரசு நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 200க்கும் மேற்பட்ட மாணவர்கள் பயின்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பள்ளிக்கு சுற்றுச்சுவர் இல்லாததால் வெளி ஆட்கள் நடமாட்டம் இருப்பதுடன் இரவில் 'குடி'மையமாக பள்ளி வளாகம் மாறுகிறது.

எனவே பள்ளிக்கு சுற்றுச்சுவர் அமைக்க கல்வித்துறை அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- எஸ்.நாகராஜன், சின்னம்மாபேட்டை.


கழிவு நீர் அகற்றப்படுமா?



திருமழிசை பேரூராட்சிக்குட்பட்ட நெடுஞ்சேரி குடியிருப்பு பகுதிகளில் சாலைகள் மோசமான நிலையில் உள்ளன. மேலும், பாதாள சாக்கடை அடைப்பு பிரச்னை மற்றும் கால்வாய் வசதி இல்லாததால், வீடுகளிலிருந்து வெளியேற்றப்படும் கழிவு நீர் சாலையில் சிறு குளம் போல் தேங்கி நிற்கிறது.

இதனால் ஏற்படும் துார்நாற்றத்தால் பொதுமக்களுக்கு தொற்று நோய் ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, மாவட்ட நிர்வாகம் கழிவு நீரை அகற்ற தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- டி.பால்ராஜ், திருமழிசை.


சாலையில் கால்நடைகள் உலா



தண்டலம் - அரக்கோணம் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது கடம்பத்துார் ஒன்றியத்துக்குட்பட்ட கீழச்சேரி ஊராட்சி. இப்பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில் அரசு, தனியார், தொழிற்சாலை, பள்ளி, கல்லுாரி பேருந்து கனரக வாகனம் என, தினமும் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்ட வாகனங்கள் சென்று வருகின்றன.

இப்பகுதியில் வீடுகளில் வளர்க்கப்படும் கால்நடைகள், நெடுஞ்சாலையில் படுத்து இளைப்பாறுகின்றன. இதனால் போக்குவரத்து நெரிசல் ஏற்படுவதோடு விபத்துகளும் ஏற்படுகின்றன.

எனவே, மாவட்ட நிர்வாகம் நெடுஞ்சாலையில் கால்நடைகளை கட்டுப்படுத்த கடும் நடவடிக்கை எடுக்க வேண்டுமென வாகன ஒட்டிகள் எதிர்பார்க்கின்றனர்.

- எஸ்.குமார், கீழச்சேரி.


பாலத்தில் மதுபாட்டில்கள்



திருத்தணி அடுத்த, வள்ளியம்மாபுரம் பகுதியில் புறவழிச் சாலை உயர்மட்ட பாலத்தில் 'குடி'மகன்கள் இரவு நேரத்தில் அமர்ந்து மது குடிக்கின்றனர். பின், அந்த பாட்டில்களை 'குடி'மகன்கள் உடைத்தும், அங்கேயே போட்டு விட்டும் செல்கின்றனர். இதுதவிர 'குடி'மகன்கள் வாங்கி வரும் திண்பண்டங்களின் கழிவுகளை பாலத்தின் மீது போட்டு செல்கின்றனர். இதனால் உயர்மட்ட பாலம் 'குடி'மையமாக மாறியுள்ளது.

- எஸ்.பாலாஜி, திருத்தணி.


கூடுதல் பஸ்கள் வேண்டும்



திருத்தணி - நாகலாபுரம் மாநில நெடுஞ்சாலையில், 75க்கும் மேற்பட்ட கிராமங்கள் உள்ளன. இப்பகுதி மக்கள் தங்கள் அத்தியாவசிய பணிகள் காரணமாக திருத்தணிக்கு வர வேண்டும். அதே போல் பள்ளி மாணவர்கள் மேல்நிலை மற்றும் கல்லுாரி கல்வி கற்பதற்கு திருத்தணி நகருக்கு வந்து செல்கின்றனர்.

இந்த வழித்தடங்களில், ஒரிரு பேருந்து மட்டும் இயங்குகிறது. அந்த பேருந்துகளும் காலை, மாலை நேரத்தில் இயக்கப்படாததால், மாணவர்கள், பொதுமக்கள் வெகு நேரம் காத்திருந்து ஒரே பேருந்தில் ஏறி ஆபத்தான முறையில் பயணம் செய்ய வேண்டியுள்ளன.

மேலும், இரவு நேரத்தில் பேருந்துகள் இயக்கப்படாததால் மக்கள் மற்றும் வியாபாரிகள் கடும் சிரமப்படுகின்றனர். எனவே மாணவர்கள் நலன் கருதி பள்ளி நாட்களில், கூடுதல் அரசு பேருந்துகள் இயக்க வேண்டும்.

- -எம்.பிரவீன்குமார், கோதண்டராமபுரம்.


தாழ்வாக செல்லும் மின் கம்பி



திருவாலங்காடு ஊராட்சியில் பராசக்தி நகரில் அரசு மேல்நிலைப் பள்ளி மாணவர் விடுதி செல்லும் சாலையில் மின் கம்பி தாழ்வாக செல்கிறது.

இந்த சாலை வழியாகவே விடுதியில் தங்கி படிக்கும் பள்ளி மாணவர்கள், குடியிருப்புவாசிகள் சென்று வரும் நிலையில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம் உள்ளதால் அவர்கள் அச்சமடைந்து உள்ளனர்.

மேலும், ஒரு மின் கம்பத்துக்கும் மற்றொரு கம்பத்துக்கும் நீண்ட இடைவெளி உள்ளதே இதற்கு காரணம். எனவே இதுகுறித்து மின் துறை அதிகாரிகள் ஆய்வு செய்து உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.

- கே. மகேஷ், திருவாலங்காடு.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X