ஆலோசனை கூட்டம் கட்சி நிர்வாகிகள் பங்கேற்பு

Added : நவ 23, 2022 | |
Advertisement
கூடலுார் : கூடலுாரில் எம்.எல்.ஏ., பொன்.ஜெயசீலன் தலைமையில், யானை பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.கூட்டத்தில்,'பந்தலுாரில், கும்கிகள் உதவியுடன் வனத்துறையால் பிடிக்கப்படும் மக்னா யானையை, முதுமலை வனத்தில் விட்டால், மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் ஆபத்து உள்ளது. அதனை, முகாமுக்கு கொண்டு சென்று வளர்ப்பு யானையாக மாற்ற வேண்டும். வனவிலங்கு தாக்கி


கூடலுார் : கூடலுாரில் எம்.எல்.ஏ., பொன்.ஜெயசீலன் தலைமையில், யானை பிரச்னை குறித்த ஆலோசனை கூட்டம் நடந்தது.

கூட்டத்தில்,'பந்தலுாரில், கும்கிகள் உதவியுடன் வனத்துறையால் பிடிக்கப்படும் மக்னா யானையை, முதுமலை வனத்தில் விட்டால், மீண்டும் குடியிருப்பு பகுதிகளுக்கு வரும் ஆபத்து உள்ளது. அதனை, முகாமுக்கு கொண்டு சென்று வளர்ப்பு யானையாக மாற்ற வேண்டும். வனவிலங்கு தாக்கி உயிரிழப்பவர் குடும்பத்துக்கு, 10 லட்சம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும். அரசு பணி வழங்க வேண்டும்,' என்பன உட்பட பல தீர்மானங்கள் எடுக்கப்பட்டது.

அ.தி.மு.க., நகர செயலாளர் அனுப், வாசு (மா.கம்யூ), சகாதேவன் (விடுதலை சிறுத்தைகள்), ரவிக்குமார் (பா.ஜ.,) உட்பட பலர் பங்கேற்றனர்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X