திருவள்ளூர்:திருவள்ளூர் அடுத்த, காக்களூர் பை - பாஸ் சாலை, கவுசல்யா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன், 42. கூலித் தொழிலாளியான இவருக்கு, ரேகா என்ற மனைவியும், மூன்று குழந்தைகளும் உள்ளனர்.
மதுவுக்கு அடிமையாக இருந்த சீனிவாசன், சரிவர வேலைக்குச் செல்வதில்லை. மேலும், அவ்வப்போது 'குடி'போதையில், மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார்.
இந்த நிலையில், நேற்று முன்தினம் வீட்டில் யாருமில்லாத நேரத்தில், சீனிவாசன் துாக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார்.
இதுகுறித்து, அவரது மனைவி ரேகா அளித்த புகாரையடுத்து, திருவள்ளூர் தாலுகா போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.