கொட்டும் மழையில் முன்னோர்களுக்கு திதி

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதி மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், முன்தினம் இரவே கோவிலில் குவிந்தனர்.பலத்த மழை பெய்ததால், கோவில் மண்டபத்தில் பக்தர்கள் தங்கினர். நேற்று அதிகாலை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஹிருத்தாபநாசினி

திருவள்ளூர்:திருவள்ளூர் வீரராகவ பெருமாள் கோவிலில், நேற்று அமாவாசையை முன்னிட்டு, மாவட்டத்தின் பல்வேறு பகுதி மற்றும் ஆந்திரா, தெலுங்கானா உள்ளிட்ட பிற மாநிலங்களில் இருந்தும் ஏராளமான பக்தர்கள், முன்தினம் இரவே கோவிலில் குவிந்தனர்.

பலத்த மழை பெய்ததால், கோவில் மண்டபத்தில் பக்தர்கள் தங்கினர். நேற்று அதிகாலை, கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல், ஹிருத்தாபநாசினி குளக்கரையில் தங்கள் முன்னோருக்கு திதி கொடுத்தனர்.

பின், நீண்ட வரிசையில் காத்திருந்து, வீரராகவ பெருமாளை தரிசித்தனர்.

* திருத்தணியை அடுத்த, மத்துார் மகிஷாசுரமர்த்தினி அம்மன் கோவிலில் கார்த்திகை மாத அமாவாசையையொட்டி, மூலவர் அம்மனுக்கு காலை 8:00 மணிக்கு 108 லிட்டர் பாலாபிஷேகம் நடந்தது.

அதை தொடர்ந்து அம்மனுக்கு சிறப்பு அலங்காரம் மற்றும் மஹா தீபாராதனை நடந்தது. மாலையில் மூலவருக்கு மலர் அலங்காரம் மற்றும் பூஜைகள் நடந்தது.

அதே போல், திருத்தணி நகராட்சியில் உள்ள படவேட்டம்மன், தணிகாசலம்மன், துர்க்கையம்மன், அங்காள பரமேஸ்வரியம்மன் மற்றும் பெரியபாளையத்து அம்மன் ஆகிய கோவில்களில், அமாவாசை ஒட்டி மூலவருக்கு சிறப்பு அபிஷேகம் மற்றும் பூஜைகள் நடந்தன. மகிஷாசுரமர்த்தி அம்மன், அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவில்களில் ஊஞ்சல் சேவை நடந்தது.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X