மனுக்கள் மீது நடவடிக்கை: சப்-கலெக்டர் உறுதி

Added : நவ 23, 2022 | |
Advertisement
பொள்ளாச்சி : ''இல்லம் தேடி கல்வி திட்டம், கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. எனவே, மாணவர்கள் முறையாக அனுப்ப பெற்றோர் முன்வர வேண்டும்,'' என, சப்-கலெக்டர் தெரிவித்தார்.பொள்ளாச்சி வருவாய்துறை சார்பில், மக்கள் தொடர்பு முகாம், கந்த மஹாலில் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தாசில்தார் வைரமுத்து முன்னிலை வகித்தனர்.
 மனுக்கள் மீது நடவடிக்கை: சப்-கலெக்டர் உறுதி



பொள்ளாச்சி : ''இல்லம் தேடி கல்வி திட்டம், கற்றல் திறனை மேம்படுத்த உதவுகிறது. எனவே, மாணவர்கள் முறையாக அனுப்ப பெற்றோர் முன்வர வேண்டும்,'' என, சப்-கலெக்டர் தெரிவித்தார்.

பொள்ளாச்சி வருவாய்துறை சார்பில், மக்கள் தொடர்பு முகாம், கந்த மஹாலில் நேற்று நடந்தது. சப் - கலெக்டர் பிரியங்கா தலைமை வகித்தார். எம்.எல்.ஏ., பொள்ளாச்சி ஜெயராமன், தாசில்தார் வைரமுத்து முன்னிலை வகித்தனர். வருவாய்துறை அதிகாரிகள் உள்ளிட்ட அரசுத்துறை அதிகாரிகள் பங்கேற்றனர்.

சப் - கலெக்டர் பேசியதாவது:

மக்கள் தொடர்பு முகாமில், அனைத்து அரசுத்துறை அதிகாரிகளும் பங்கேற்பதால் மக்கள் தங்களது பிரச்னைகளை தெரிவித்து, உடனடித்தீர்வு பெறலாம். முகாமில் அரசுத்துறை சார்பில் அரசின் நலத்திட்டங்கள் குறித்து கண்காட்சியாக வைக்கப்பட்டு, மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தப்படுகிறது.

இதன் வாயிலாக, அரசின் திட்டங்களை தெரிந்து கொள்வதுடன், அதற்கு எவ்வாறு விண்ணப்பிக்க வேண்டும் என்பது குறித்தும், சந்தேகங்களையும் கேட்டு தெளிவுப்படுத்தி கொள்ளலாம். இல்லம் தேடி கல்வி திட்டம், மாணவர்களின் கற்றல் திறனை மேம்படுத்த நடத்தப்படுகிறது. கொரோனா கால கட்டத்தில் கற்றல் திறனில் ஏற்பட்ட தடைகளை நீக்கும் வகையில் இந்த திட்டத்தில் பயிற்சி அளிக்கப்படுகிறது.

எனவே, மாணவர்கள் முறையாக பயிற்சிக்கு செல்கின்றனரா, என பெற்றோர் கண்காணிப்பு செய்வதுடன், பயிற்சிக்கு அனுப்பவும் முன்வர வேண்டும்.

வருவாய் துறை சேவைகளுக்கு, 'ஆன்லைன்' வாயிலாக மக்கள் விண்ணப்பிக்கலாம். முதியவர்கள், தங்களது வீட்டில் உள்ளவர்களின் உதவியுடன் விண்ணப்பிக்கலாம். வீண் அலைச்சல் தவிர்க்கப்படும்.

பொதுமக்கள் வழங்கும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுப்பது குறித்து கண்காணிப்பு செய்யப்படுகிறது. இதற்கான ஆய்வு கூட்டம், சப் - கலெக்டர் அலுவலகம் மற்றும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடத்தப்பட்டு தீர்வு குறித்து கேட்டறியப்படுகிறது.

இவ்வாறு, அவர் பேசினார்.

எம்.எல்.ஏ., பேசுகையில், ''மக்களிடம் நலத்திட்டங்களை கொண்டு சேர்ப்பதில் அதிகாரிகளின் பங்கு முக்கியமானது. திட்டங்கள் முழுமையாக மக்களை சென்றடைய நடவடிக்கை எடுக்க வேண்டும்,'' என்றார்.

பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் நிகழ்ச்சியில், முதியோர் மற்றும் விதவை உதவித் தொகை, இலவச வீட்டுமனைப்பட்டா மற்றும் வேளாண் துறை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் துறை, மருத்துவ உபகரணங்கள், மகளிர் திட்டம், தாட்கோ திட்டம், சலவைப்பெட்டி, தையல் இயந்திரம் உள்ளிட்ட நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன.

மொத்தம், 309 பயனாளிகளுக்கு, 17 லட்சத்து, 55 ஆயிரத்து, 757 ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டன. முதியோர் உதவித்தொகை, பட்டா மாறுதல் என்பன உள்ளிட்ட, 170 மனுக்கள் பெறப்பட்டன.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X