வேகத்தை குறைத்து வாகனங்களை இயக்க வேண்டும்: ஆர்.டி.ஓ.,

Added : நவ 23, 2022 | |
Advertisement
திருத்தணி:திருத்தணி பழைய சென்னை சாலையில், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று ஓட்டுனர் உரிமம் புதியதாக எடுக்கவும் மற்றும் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கவும், 100க்கும் மேற்பட்டோர் வந்தனர்.அவர்களிடம் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது:சாலை விதிகள் கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக,

திருத்தணி:திருத்தணி பழைய சென்னை சாலையில், திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் அலுவலகம் இயங்கி வருகிறது. இந்த அலுவலகத்தில் நேற்று ஓட்டுனர் உரிமம் புதியதாக எடுக்கவும் மற்றும் ஓட்டுனர் உரிமம் புதுப்பிக்கவும், 100க்கும் மேற்பட்டோர் வந்தனர்.

அவர்களிடம் திருத்தணி மோட்டார் வாகன ஆய்வாளர் ராஜேஸ்வரி பேசியதாவது:

சாலை விதிகள் கடைபிடித்து வாகனங்களை இயக்க வேண்டும். குறிப்பாக, வாகனம் ஓட்டும் போது, வேகத்தை அதிகரிக்காமல் குறைந்த வேகத்தில் ஒட்ட வேண்டும்.

கார் ஓட்டுனர்கள் கட்டாயம் சீட் பெல்ட் அணிந்தும், இருசக்கர வாகனங்கள் ஒட்டுபவர்கள் கட்டாயம் ஹெல்மெட் அணிந்தும் ஓட்ட வேண்டும்.

ஓட்டுனர் உரிமம் இல்லாமல் வாகனங்களை இயக்குவதற்கு சட்டப்படி குற்றமாகும். பதினெட்டு வயதுக்கு மேற்பட்டவர்கள் ஓட்டுனர் உரிமத்திற்கு விண்ணப்பித்து லைசென்ஸ் பெறலாம்.

ஆம்புலன்ஸ் வாகனத்திற்கு உடனே வழிவிட வேண்டும். வாகனங்கள் ஒட்டும் போது கவனச்சிதறல் இருக்கக்கூடாது.

மொத்தத்தில் விபத்துகள் குறைக்க வேண்டும் என்றால், வேகத்தை குறைத்தும், சாலை விதிகள் கடைப்பிடிக்க வேண்டும்.

இவ்வாறு அவர் பேசினார்.

புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement


வாசகர் கருத்து

முதல் நபராக கருத்து தெரிவியுங்கள்!

உங்கள் கருத்தைப் பதிவு செய்ய

(Press Ctrl+g   to toggle between English and Tamil)
Login :
New to Dinamalar ?
கருத்து விதிமுறை

We use cookies to understand how you use our site and to improve user experience. This includes personalising content and advertising. By continuing to use our site, you accept our use of cookies, revised Privacy Policy.

Learn more I agree X